பாக்கியலட்சுமி சீரியல் நடிகருடன் காதல்..? சிக்கிய செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானா!
பிரபல சீரியல் நடிகை ஒருவர், விஜய் டிவி-யில் நடித்து வரும் 'பாக்கிய லட்சுமி' சீரியல் நடிகரை காதலித்து வருவதாக சூசகமாக தெரிவித்துள்ளதால், இவரது காதல் விஷயம் தற்போது வெளியே கசிந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு மூத்த மகனான ஆதி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜு நடித்து வந்த நிலையில் , ஒரு சில காரணங்களால் தற்போது தொகுப்பாளர் அக்னி நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலில், பாவாடை தாவணி மற்றும் புடவையில் வலம் வரும் பட்டாம் பூச்சியாய் நடித்து வரும் ஹீரோயினாக ஷபானா ஷாஜகான் நடித்து வருகிறார்.
ஆதி - பார்வதி ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அதே போல் ஒவ்வொரு வாரமும், டி.ஆர்.பி-யிலும் பல முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டி வருகிறது இந்த சீரியல்.
தற்போது செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா முதல் முறையாக காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் விஜய் டிவி சீரியல் பிரபலத்தை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கிய லட்சுமிக்கு மூத்த மகனாக, செழியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும், ஆரியனை தான் இவர் காதலித்து வருகிறாராம்.
ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுவது போல் ஆர்யன் எழுப்பிய கேள்விக்கு ஷபானா 'என்னுடையது' என பதில் அளித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷபானா இவரை காதலித்து வருகிறார் என கூறி வந்தாலும், இதுகுறித்து இருவருமே அதிகார பூர்வமாக வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.