இவரை பார்த்தாலே ஸ்பெஷல் பீலிங் தான்..! பிரபலத்துடன் இருக்கும் ஸ்பெஷல் போட்டோவை பகிர்ந்த செல்வராகவன்!
இயக்குனர் செல்வராகவன் தனக்கு விருப்பமான இயக்குனர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முற்றிலும் வித்யாசமான கதைக்களத்தில், தன்னுடைய தம்பியையே ஹீரோவாக வைத்து இயக்கி, முதல் படத்திலேயே... ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் செல்வராகவன். ஒரே மாதிரியான கதைகளை படமாக்காமல் , அடுத்தடுத்து கதையிலும், கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டுவது தான் இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாகியுள்ளது.
'துள்ளுவதோ இளமை' படத்தை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து இயக்கிய, 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் வெளியான போது திரையரங்கங்களில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், சில வருடங்கள் கழித்தே இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்க துவங்கியது. இந்த படம் குறித்து, நடிகர் பார்த்திபன் கூட ஒருமுறை மேடையில் பேசியபோது, இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது என கூறி இருந்தார்.
'ஜெயிலர்' படத்தில் இருந்து வெளியான அல்டிமேட் புகைப்படம்..! வேற லெவலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!
செல்வராகவன் இயக்கத்தில் இடைப்பட்ட சில வருடங்களில் வெளியான, இரண்டாம் உலகம், NGK, போன்ற படங்கள் தோல்வியை தழுவினாலும், கடைசியாக வெளியான 'நானே வருவேன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது படம் இயக்குவதை தாண்டி, நடிப்பிலும் கலக்கி வரும் செல்வராகவன்... விஜய்யின் பீஸ்ட், கீர்த்தி சுரேஷுடன் சாணி காகிதம், நானே வருவேன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், 'பகாசூரன்' படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!
இந்நிலையில் இவர், இயக்குனர் மணிரத்னத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு... எப்போதுமே இவரை பார்த்தல் ஸ்பெஷல் பீலிங் வந்துவிடும் என மிகவும் நெகிழ்ச்சியான வார்த்தைகளுடன் போட்டுள்ள பதிவும், புகைப்படமும் வைரலாகி வருகிறது.