MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 7 முறை தற்கொலை முயற்சி! பதைபதைக்க வைத்த தனுஷின் அண்ணன் செல்வராகவன்

7 முறை தற்கொலை முயற்சி! பதைபதைக்க வைத்த தனுஷின் அண்ணன் செல்வராகவன்

நடிகர் தனுஷின் உடன்பிறந்த சகோதரரும், தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனருமான செல்வராகவன், தான் தற்கொலைக்கு முயன்றது பற்றி பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 29 2024, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Selvaraghavan

Selvaraghavan

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் காலம் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் தற்போது நடிகனாக பிசியாக நடித்து வருவதால் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டுவிட்டு முழுநேர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றது பற்றி இன்ஸ்டாவில் பேசி இருக்கிறார் செல்வராகவன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Dhanush, Selvaraghavan

Dhanush, Selvaraghavan

அதில் அவர் கூறியதாவது : “வாழ்க்கையில் உலகம் ஃபுல்லா பார்த்தா கூட, இந்த நிலையை கடக்காத ஆளே இருக்க முடியாது. அதுதான் தற்கொலை மற்றும் மன அழுத்தம். நானே 7 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். ஆனா அது இப்போ இல்ல நிறைய வருஷத்துக்கு முன்னாடி, ஒவ்வொரு வாட்டியும் உள்ளே ஒரு ஆழமான குரல் ஒன்று கேட்கும். பொறுமையா இரு... பொறுமையா இருனு சொல்லும். நானும் கடவுள் ஏதோ சொல்கிற மாதிரி இருக்குனு விட்ருவேன்.

இதையும் படியுங்கள்... சின்ன வயசுல தம்பிய பாசமா பாத்துக்கோங்க... தனுஷ் பற்றி பச்சையாகப் பேசி சிரிக்க வைத்த செல்வராகவன்!

34
Dhanush Brother selvaraghavan

Dhanush Brother selvaraghavan

அதன்பின்னர் 10 நாட்கள் கழித்தோ, 6 மாதங்கள் கழித்தோ அல்லது ஒரு வருஷம் கழித்து கூட வாழ்க்கை டப்புனு மகிழ்ச்சிகரமா, அமைதியா மாறிடும். அப்போ தான் தோணும் அய்யோ நாம் மட்டும் தற்கொலை செய்திருந்தால் இதையெல்லாம் மிஸ் பண்ணிருப்போமே என்று. சொல்லப்போனால் வாழ்க்கையே அதுதான், தற்கொலை செய்பவர்கள் எல்லாம் நினைத்துக் கொள்வது என்ன தெரியுமா... அடுத்த ஜென்மத்திலாவது நிம்மதியாக பிறக்க வேண்டும் என்பது தான்.

44
Director Selvaraghavan

Director Selvaraghavan

அதுமட்டுமில்லாமல் அடுத்த ஜென்மத்தில் சுவிட்சர்லாந்தில் நிம்மதியா ஒரு காட்டேஜ் நடத்தனும்னு நெனப்பாங்க. ஒருவேளை காட்டில் இருக்கும் விலங்காகவோ, அல்லது வேறு எதுவாகவோ பிறந்தால் என்ன ஆவது. அடுத்த ஜென்மத்துல என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும். அதேமாதிரி மன அழுத்தத்தில் இருந்தாலும் அதனோடு போய் சண்டை போடக்கூடாது. ஆமாம் என்று இருந்துவிட்டால் அதற்கு தீர்வு கிடைத்துவிடும். தீர்வு கிடைக்காத பிரச்சனையே கிடையாது” என்று அவர் பேசியுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் டைரக்டர் இல்ல மோட்டிவேட்டர் என்று பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ராயன் பட இசை வெளியீட்டு விழா.. தனுஷை பங்கமாய் கலாய்த்த செல்வா - Audio Launch எப்போது ஒளிபரப்பாகிறது?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செல்வராகவன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved