- Home
- Gallery
- ராயன் பட இசை வெளியீட்டு விழா.. தனுஷை பங்கமாய் கலாய்த்த செல்வா - Audio Launch எப்போது ஒளிபரப்பாகிறது?
ராயன் பட இசை வெளியீட்டு விழா.. தனுஷை பங்கமாய் கலாய்த்த செல்வா - Audio Launch எப்போது ஒளிபரப்பாகிறது?
Raayan Audio Launch : ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்த நிலையில், விரைவில் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

actor dhanush
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் "ராயன்". இது தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இது அவருடைய ஐம்பதாவது திரைப்படமாகவும் வெளியாக உள்ளது.
"இது 10 வருட தவம்" 42 வயதில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன நடிகை ஜூலி - எமோஷனலான "பேபி ஷவர்" பிக்ஸ் இதோ!
Raayan movie
பொதுவாக ஒரு நடிகரின் 50வது திரைப்படம் என்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதே போல தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "ராயன்" திரைப்படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
ar rahman
வருகின்ற ஜூலை மாதம் 26ம் தேதி உலகெங்கும் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது, இதில் அப்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக விழாவின் நாயகன் ஏ.ஆர் ரகுமானும் பங்கேற்றார்.
Raayan
மேலும் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் பேசும்போது, "சிறுவயதில் தம்பிகளை வளர்க்கும் பொழுது, கவனமாக அவர்களை அடிக்காமல், மிரட்டாமல் வளர்க்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் வளர்ந்து நம்மையே பதிலுக்கு மிரட்டுவார்கள், அதுதான் ராயன் படத்தில் எனக்கு நடந்தது" என்று கூறி மகிழ்ச்சியாக பேசியுள்ளார். நாளை ஜூலை மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் "ராயன்" திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பப்பட உள்ளது.
மீண்டும் மணப்பெண்ணாக மாறிய ஶ்ரீதிகா! செக்கச் சிவந்த சேலையில் ஆர்யனுடன் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்!