MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒபீனியன் சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது... எரிமலையாய் வெடித்து பேசிய செல்வராகவன்..!

ஒபீனியன் சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது... எரிமலையாய் வெடித்து பேசிய செல்வராகவன்..!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வரும் செல்வராகவன், தன்னைப் பற்றிய ஆன்லைன் ட்ரோல்களுக்கு தன்னுடைய பாணியிலேயே தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 25 2026, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Selvaraghavan fires back at trolls
Image Credit : X

Selvaraghavan fires back at trolls

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்த இடம் பிடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ இணையத்தில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "உன்னால் முடியாது, உனக்கு திறமை இல்லை என்று கூறுவோருக்கு அப்படிச் சொல்லும் தகுதியே கிடையாது. தங்களிடம் ஆயிரம் குறைகளை மூட்டை கட்டிக்கொண்டு அடுத்தவரை நோகடிப்பவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவேண்டாம்" என்று நேரடியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசியிருக்கிறார் செல்வராகவன்.

24
செல்வராகவன் பேசியது என்ன?
Image Credit : our own

செல்வராகவன் பேசியது என்ன?

மனசாட்சியோடு உழைத்தால், லட்சியம் தானே கை கொடுக்கும் என்றும், பிறர் வார்த்தைகளில் சிக்கிக்கொண்டால் வாழ்க்கை தேங்கிவிடும். யாரைப் பற்றியும் ஒபீனியன் சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் பேசியிருக்கிறார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவரது சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சில நெட்டிசன்கள் அவரை இலக்காக வைத்து கேலி செய்துவந்தனர். இந்த பின்னணியில் பார்க்கும்போது, இந்த வீடியோ அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

Related Articles

Related image1
என்னால் கண்ணீரை அடக்க முடியல... செல்வராகவன் வாழ்க்கையில் என்ன நடக்குது? கன்பியூஸ் ஆன ரசிகர்கள்
Related image2
மீண்டும் செல்வராகவன் மேஜிக்! 'மனிதன் தெய்வமாகலாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
34
செல்வராகவன் சர்ச்சை
Image Credit : our own

செல்வராகவன் சர்ச்சை

செல்வராகவனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில வதந்திகள் சுற்றி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், அந்த விவகாரத்தை இறுதியாக முடிவுக்கு கொண்டுவர முடியாத நிலையே தொடர்கிறது. செல்வராகவனின் இந்த வார்த்தைகள் திரையுலகை மட்டுமல்ல, சாதாரண மனிதர்களையும் தொட்டிருக்கின்றன. அவர் நடிப்பில் தற்போது மனிதன் தெய்வமாகலாம் என்கிற படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அப்படம் வருகிறா ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

44
செல்வராகவன் கைவசம் உள்ள படங்கள்
Image Credit : Instagram

செல்வராகவன் கைவசம் உள்ள படங்கள்

இதுதவிர செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. அப்படம் அவரின் கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையையும் எழுதி முடித்துள்ளாராம் செல்வராகவன். அப்படத்தின் ஷூட்டிங்கும் அடுத்த ஆண்டு தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. இப்படி சினிமாவில் பிசியான நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் பயணித்து வருகிறார் செல்வா.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செல்வராகவன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kamal vs Ilaiyaraja: "இஞ்சி இடுப்பழகி" பாட்டின் ரகசியம் உடைத்த கமல்.! ஒரே நிமிடத்தில் உருவான தேவர்மகன் பாட்டு.! மேஜிக் செய்த இளையராஜா.!
Recommended image2
துணிக்கடையில் வேலை பார்த்திருக்கேன்... டிராகன் நாயகி கயாடு லோஹரின் அதிர வைக்கும் கதை!
Recommended image3
விஜயா மூஞ்சில் கரியை பூசிய மீனா.. டுபாக்கூர் சாமியாரால் சிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
என்னால் கண்ணீரை அடக்க முடியல... செல்வராகவன் வாழ்க்கையில் என்ன நடக்குது? கன்பியூஸ் ஆன ரசிகர்கள்
Recommended image2
மீண்டும் செல்வராகவன் மேஜிக்! 'மனிதன் தெய்வமாகலாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved