MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Song Secret : கதவுக்காக நா.முத்துக்குமார் எழுதிய காதல் பாடல் பற்றி தெரியுமா?

Song Secret : கதவுக்காக நா.முத்துக்குமார் எழுதிய காதல் பாடல் பற்றி தெரியுமா?

பாடலாசிரியர் நா முத்துக்குமார் கதவுக்காக எழுதிய காதல் பாடல் பல இசையமைப்பாளர்களால் ரிஜெக்ட் செய்யப்பட்ட நிலையில், அதனை ஜிவி பிரகாஷ்குமார் அடிபொலி ஹிட் அடித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 22 2026, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Secret Behind Na Muthukumar Song
Image Credit : facebook/na.muthukumar

Secret Behind Na Muthukumar Song

பாடலாசிரியர் நா முத்துக்குமார் கோலிவுட்டில் அதிகளவில் பணியாற்றிய இசையமைப்பாளர்களில் ஜிவி பிரகாஷ் குமாரும் ஒருவர். ஜிவி-யின் முதல் படமான வெயிலில் தொடங்கிய இவர்களது கூட்டணி, அடுத்தடுத்து தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா என தொடர்ந்து பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தனர். நா முத்துக்குமார் எழுதி பல இசையமைப்பாளர்கள் ரிஜெக்ட் பண்ணிய பாடல் ஒன்று இறுதியாக ஜிவி பிரகாஷ் குமார் கையில் கிடைத்ததும் அவர் அப்பாடலை அடிபொலி ஹிட் அடிக்க வைத்திருக்கிறார். அப்பாடலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
நா முத்துக்குமார் பாடல் ரகசியம்
Image Credit : facebook/na.muthukumar

நா முத்துக்குமார் பாடல் ரகசியம்

நா முத்துக்குமார், ரொம்ப நாளா ஒரு பாடலுக்கான லிரிக்ஸ் வச்சிருந்தாராம். அதை யாருமே வாங்கவில்லை. தெய்வத்திருமகள் ஹிட்டான சமயத்தில் ஜிவி பிரகாஷ் உடன் விமானத்தில் சென்றிருக்கிறார் நா முத்துக்குமார். அப்போது, ஜிவி என்கிட்ட ஒரு நல்ல லிரிக்ஸ் இருக்கு. எல்லா இடத்துலையும் அந்த லிரிக்ஸை கொடுத்தேன். யாருமே எடுத்துக்கல, நீ கேக்குறியா சூப்பரா இருக்கும் என சொல்லி இருக்கிறார். அதற்கு ஜிவி உடனே கொடுங்க அண்ணா என கேட்க, உடனே நா முத்துக்குமாரும் பாடல் வரிகளை சொல்லி இருக்கிறார். அப்படி விமான பயணத்திலேயே அந்த பாடலை கம்போஸ் செய்திருக்கிறார்கள்.

Related Articles

Related image1
கண்ணதாசனின் வரிகளை அலேக்காக காப்பி அடித்து; நா முத்துக்குமார் எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Related image2
நா.முத்துக்குமார் சென்சார் போர்டுக்கே விபூதி அடித்த கதை தெரியுமா? கவிஞரின் தக் லைஃப் சம்பவம்..!
34
ஒரு பாதி கதவு பாடல் உருவான விதம்
Image Credit : facebook/na.muthukumar

ஒரு பாதி கதவு பாடல் உருவான விதம்

அந்த பாடல் வேறெதுவுமில்லை, ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாதி கனவு நீயடி பாடல் தான். அந்த விமான பயணத்தின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் உடன் இருந்ததால், அவரிடம் சொல்லி அதை அவருடைய படத்துக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொன்னாராம் ஜிவி. திருட்டு பயத்தினால் கதவுகள் சேர்ந்தே இருக்கும் என அந்த பாடலில் அழகாக எழுதி இருப்பார் முத்துக்குமார். அதேபோல் கனவுகளை திருடும் அதிசயத்தை காதல் செய்யும் என அழகாக வர்ணித்து இருப்பார். இடி, மழை என எது பேய்ந்தாலும் கதவுகள் அசையாமல் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டி இருப்பார்.

44
கதவும்... காதலும்
Image Credit : facebook/na.muthukumar

கதவும்... காதலும்

இதயம் ரெண்டாக இருந்ததால் கதவு தேவைப்பட்டது. தற்போது ஒன்றாகிவிட்டதால் அதற்கு எதுக்கு கதவு என அழகாக எழுதி இருப்பார் முத்துக்குமார். கதவு இல்லாமல் போனதால் நம் வீட்டை சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளின் பூங்காற்று நம் வீட்டுக்குள் வீசும் என அழகாக கதவை காதலோடு ஒப்பிட்டு எழுதி இருப்பார் முத்துக்குமார். இப்பாடல் இன்றளவும் காதலர்கள் பலரின் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது. இப்பாடலைக் கேட்ட பின்னர், அதை வேண்டாம் என்று ரிஜெக்ட் பண்ணிய இசையமைப்பாளர்கள் நிச்சயம் ஃபீல் பண்ணி இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி. வி. பிரகாஷ் குமார்
நா. முத்துக்குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தலைவர் 173 முதல் ராக்கா வரை... பான் இந்தியா படங்களால் நிரம்பி வழியும் 2027; க்யூவில் நிற்கும் 5 படங்கள்
Recommended image2
பிரியாணிக்கு No சொல்லி உப்பு சப்பில்லாமல் சாப்பிடும் STR.! சிம்பு சைவத்திற்கு மாறியதன் ரகசியம் தெரியுமா?
Recommended image3
முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
Related Stories
Recommended image1
கண்ணதாசனின் வரிகளை அலேக்காக காப்பி அடித்து; நா முத்துக்குமார் எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image2
நா.முத்துக்குமார் சென்சார் போர்டுக்கே விபூதி அடித்த கதை தெரியுமா? கவிஞரின் தக் லைஃப் சம்பவம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved