உங்க அப்பா என்ன ஜாதி?... முக்கிய நபரின் கேள்வியால் அதிர்ந்து போன சாந்தனு
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சாந்தனு, தன் தந்தையின் ஜாதி என்ன என முக்கிய நபர் கேள்வி எழுப்பியது பற்றி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். திரைக்கதை வித்தகனாக திகழ்ந்து வந்த இவர் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இவரது மனைவி பூர்ணிமாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்த ஜோடிக்கு சாந்தனு என்கிற மகன் உள்ளார். இவருக்கு சக்கரக்கட்டி என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார்.
பல ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடித்து வந்தாலும், இவருக்கும் பெரியளவில் எந்தபடமும் திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை. இவர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தின் இணைந்து நடித்தபோது, அப்படம் தனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தரும் என நம்பினார். ஆனால் படத்தில் அவர் நடித்த பெரும்பாலான காட்சிகள் கத்திரி போட்டு தூக்கப்பட்டதால், அதுவும் அவருக்கு பெரியளவில் பெயரை பெற்றுத்தரவில்லை.
இதையும் படியுங்கள்... காதலித்து வசமாக சிக்கிக்கொண்ட சாய் பல்லவி... அம்மாவிடம் தர்ம அடி வாங்கிய பகீர் சம்பவம்
இதையடுத்து மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் உடன் கூட்டணி அமைத்த சாந்தனு, அவர் இயக்கிய இராவண கோட்டம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இராவண கோட்டம் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் உற்சாகத்தில் திளைத்துப் போய் உள்ளார் சாந்தனு.
இந்த நிலையில், இராவண கோட்டம் பட ஷூட்டிங்கின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசி உள்ளார். அதன்படி சாந்தனு, இராவண கோட்டம் பட ஷூட்டிங்கிற்காக இராமநாதபுரம் அருகே இருக்கும் கிராமத்திற்கு சென்றாராம். அப்போது அங்குள்ள பள்ளிக்கு சென்றபோது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தனுவை சந்தித்து பேசினாராம். அப்போது உதவியாளரிடம் காபி வாங்கிவரச் சொன்ன அவர், தன்னிடம் காபி கொடுக்கும் முன் உங்க அப்பா என்ன ஆளுங்க என கேட்டார். என்ன இப்படி வெளிப்படையாக ஜாதியை பற்றி கேட்கிறார் என்று அதிர்ச்சியான சாந்தனு, தன் ஜாதி என்ன என்பதை சொன்ன பின்னர் தான் காபி தன் கைக்கு வந்ததாக கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நிச்சயதார்த்தத்திற்கு பின் சர்வானந்த் திருமணம் நின்று விட்டதா? தீயாய் பரவிய தகவல்... உண்மையை உடைத்த நண்பன்!