காதலித்து வசமாக சிக்கிக்கொண்ட சாய் பல்லவி... அம்மாவிடம் தர்ம அடி வாங்கிய பகீர் சம்பவம்
நடிகை சாய் பல்லவி, காதலனுக்கு லவ் லெட்டர் எழுதி வீட்டில் அம்மாவிடம் வசமாக மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கிய சம்பவத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவரான நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத்தந்தது. அப்படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. அப்படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டுகள் ஆகியபோதிலும் இன்றளவும் அவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதையடுத்து தமிழில் அறிமுகமான சாய் பல்லவி, தியா, மாரி 2, என்.ஜி.கே என பல்வேறு படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரியளவில் வெற்றியடையாததால் டோலிவுட் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் சாய் பல்லவி.
தற்போது நடிகை சாய் பல்லவி, கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்... ராஜமவுலியிடம் ஸ்ரீதேவி வைத்த டிமாண்ட்... மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாகுபலி சம்பவம்
இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, தனது முதல் காதல் குறித்து பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி உள்ளார். அதன்படி 7-ம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படித்த மாணவன் ஒருவரை பார்த்ததும் சாய்பல்லவிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். அந்த மாணவன் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதும், அதனை அவனுக்கு தெரிவிக்க காதல் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் சாய் பல்லவி.
அந்த கடிதத்தை அந்த மாணவனிடம் கொடுக்க தயங்கி அதனை தன் புத்தகத்திலேயே வைத்துக்கொண்டாராம். அந்த கடிதம் எதிர்பாராத விதமாக அவரின் அம்மாவின் கையில் சிக்கி இருக்கிறது. கடிதத்தை படித்ததும் இந்த வயசுலயே உனக்கு காதல் கேக்குதா என கூறி அடி வெளுத்தாராம். அந்த சம்பவத்திற்கு பின் தன் தாயிடன் அடிவாங்கும் அளவுக்கு தான் நடந்துகொள்ளவில்லை என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... முதலில் படத்தை பாருங்க.. அப்புறம் பேசுங்க! தி கேரளா ஸ்டோரி நடிகை அதா ஷர்மா ஓப்பன் டாக்