திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும்... ஐட்டம் டான்சில் கவர்ச்சியால் வெறியேற்றிய சாயிஷா! ஆடிப்போன ரசிகர்கள்!
நடிகை சாயிஷா பத்து தல படத்தில், ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ பாடல் வெளியாகி... பார்க்கும் ரணகளமாகியுள்ளது.
தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'வனமகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சாயிஷா.
முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும், நடன அசைவுகளாலும் ரசிகர்களை மயக்கிய இவர், பின்னர் விஜய் சேதுபதி, கார்த்தி, சூர்யா, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அசுர வேகத்தில் முன்னணி நடிகை என்கிற இதற்கு பிடித்த இவர், அதே வேகத்தில் திருமணம் செய்து செட்டில் ஆனதும் யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான்.
நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக , கஜினிகாந்த் படத்தில் நடித்த போது... ஆர்யா மீது காதல்வயப்பட்ட சாயிஷா , பெற்றோரிடம் போராட்டம் செய்து ஆர்யாவையே திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
திருமணத்திற்கு பின்னர், ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே நடித்து கொடுத்த இவர், திருமணம் ஆனா இரண்டு வருடத்தில் அழகிய பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார்.
தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்த சாயிஷா திடீர் என யாரும் எதிர்பாராத நேரம் கவர்ச்சி கம்-பேக் கொடுத்துள்ளார்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!
இவர், குட்டையான ஸ்கர்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... ராவாடி என்கிற ஐட்டம் பாடலுக்கு குலுங்க குலுங்க வெறித்தனமாக ஆட்டம் போட்டு, இளம் நெஞ்சங்களையே ஆடச்செய்துள்ளார்.
பக்கா மாஸ் படமாக சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் பக்காவாக ஸ்கெச் போட்டு இறங்கியுள்ள சாயிஷா மீண்டும் சினிமா ரீ-என்ட்ரிக்கு தயாராகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.