MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha: முழுமையாக மயோசிட்டிஸில் இருந்து மீண்டு விட்டாரா சமந்தா? உடல்நிலை பற்றி முதல் முறையாக கூறிய தகவல்!

Samantha: முழுமையாக மயோசிட்டிஸில் இருந்து மீண்டு விட்டாரா சமந்தா? உடல்நிலை பற்றி முதல் முறையாக கூறிய தகவல்!

நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக, தாங்க முடியாத வலி மற்றும் வேதனைகளை அனுபவித்த நிலையில்... முதல் முறையாக தன்னுடைய உடல்நிலை குறித்துபகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 25 2023, 10:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், என அடுத்தடுத்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தவர் சமந்தா. திருமணத்திற்கு பின்பும், திரை உலகில் கவனம் செலுத்தி வந்த சமந்தா அன்பான மனைவியாகவும், பொறுப்பான மருமகளாகவும் நடந்து கொண்டு திரை உலகைச் சேர்ந்த பலரையும் வியக்க வைத்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கடந்த ஏழு ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த நடிகர் நாகசைதன்யாவை, திருமணம் செய்த 4 வருடங்களிலேயே ,திடீரென கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்ய உள்ளதாக இருவரும் அறிவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும், ஒரு முறை கூட சமந்தா, எதனால் தன்னுடைய கணவரை பிரிகிறேன் என வெளிப்படையாக கூறியதே இல்லை. அதேபோல் தான் நாகசைதன்யாவும்.

ஐட்டம் டான்சில்... சமந்தா ஓரம் கட்டிய சாயிஷா! கவர்ச்சிக் குத்தாட்டத்தில் 'ராவடி' செய்த ஆர்யா மனைவி! வீடியோ
 

36

எனினும் இருவருமே தங்களுடைய நண்பர்களிடம் ஒருவர் மேல் ஒருவர் ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் கூறப்பட்டன. ஒரு வழியாக விவாகரத்தில் முடிந்த இவர்களது திருமணத்திற்கு பின்னர், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா... தன்னுடைய பிசினஸ் மற்றும் திரைப்பட பணிகளில் பிஸியாக்கினார்.  அதேபோல் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார்.
 

46

தென்னிந்திய திரை உலகத்தை அடுத்து பாலிவுட், ஹாலிவுட், என அகலக்கால் வைத்து பறக்க இருந்த நிலையில்... இவருடைய சிறகில் அடிபட்டது போல் பேரிடியாக இவருக்கு வந்த பிரச்சனைதான் மையோசிட்டிஸ். இதன் காரணமாக கடந்த ஆண்டு முழுவதுமே இவருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. எழுந்து கூட நடக்க முடியாமல் அவதிப்பட்ட நடிகை சமந்தா, முழுமையாக திரையுலகத்தில் இருந்து சில மாதங்கள் விலகி, முழு ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்றார். 

5 லட்சம் தரேன் அந்த இடத்தை காட்டு.. கேன்சரால் அவதிப்படும் 'அங்காடி தெரு' சிந்துவுடம் கொச்சையாக பேசிய நபர்!
 

56

பல மாதங்கள் இந்த தகவலை வெளியே கசியவிடாமல் இருந்த சமந்தா, யசோதா படத்தின் டப்பிங் பணியின் போது தெரிவித்தார். பின்னர் சமந்தா விரைவில் குணமடைந்து வர பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும், தெய்வத்தின் பிராத்தனையினாலும் தற்போது மையோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்துள்ள சமந்தா, வழக்கம்போல் தன்னுடைய படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருவதோடு, உடற்பயிற்சியிலும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட சிக்ஸ் பேக் புகைப்படம் ரசிகர்கள் அதிகம் கவனம் பெற்ற ஒன்றாக மாறியது.
 

66

மேலும் தொடர்ந்து பல்வேறு போட்டோ சூட்டுகளை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் முதல் முறையாக பேட்டி ஒன்றில், சமந்தாவிடம்... தற்போது முழுமையாக மயோசிட்டிஸ் பிரச்சனை இருந்து குணமாகி விட்டீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு,  குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். முன்பை விட தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் இருந்து சமந்தா இன்னும் முழுமையாக குணடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
'Jana Nayagan' லீக் ஆனது எப்படி? பின்னணியில் உள்ள மாஸ்டர் மைண்ட் யார்? திடுக் தகவலை வெளியிட்ட எச்.வினோத்
Recommended image2
Siragadikka Aasai : கர்ப்பமான ரோகிணி... மனோஜின் டைவர்ஸ் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட டாக்டர்..!
Recommended image3
Jana Nayagan: கருப்பு சாதனையை ஊதித்தள்ளிய ஜன நாயகன்'! டாப் 10 அட்வான்ஸ் புக்கிங் லிஸ்ட்டில் விஜய் படம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved