MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ayesha Zeenath Tamil Debut Movie : ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா!

Ayesha Zeenath Tamil Debut Movie : ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா!

Ayesha Zeenath Tamil Debut Movie : உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்து வந்த ஆயிஷா இப்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். தமிழ் மட்டுமின்றி அவர் மலையாள படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 05 2025, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

கேரளா மாநிலம் காசர்கோடில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஆயிஷா ஜீனத். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரியாலிட்டி ஷோவான ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியளராக அறிமுகமானார். இதையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடரில் நடித்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய்ப்பட்ட பொன்மகள் வந்தாள் என்ற தொடர் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

இப்படி ஒவ்வொரு தொடரிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த ஆயிஷாவிற்கு ஜீ தமிழில் வெளியான சத்யா என்ற தொடர் அவரை சத்யாவாக அடையாளம் காட்டியது. இந்த தொடர் மூலமாக ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இதைத் தொடர்ந்து ராஜா மகள், செம்பருத்தி, சத்யா சீசன் 2 என்று பல தொடர்களில் நடித்தார்.

35
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஆயிஷாவிற்கு வந்தது. இந்த சீசனி கிட்டத்தட்ட 62 நாட்கள் தாக்குப்பிடித்து விளையாடி 63ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். கடந்த ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சமையல் எக்ஸ்பிரஸ் என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். ஒரு போட்டியாளராக அறிமுகமாகி தனக்கென்று தனி இடத்தை பிடித்து கொண்டு சின்னத்திரையில் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ளார்.

45
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

இவ்வளவு ஏன் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். My Father Is Strange என்ற கொரியன் சீரிஸின் தமிழ் ரீமேக்காக இந்த சீரிஸ் வெளியாகி ரசிகர்களிடையே நலல் வரவேற்பு பெற்று முதல் சீசனை சிறப்பாக முடித்துள்ளது. இந்த சீரிஸ் 128 எபிசோடுகள் வரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் தாய்க்கு பின் தாரம், தி பாத் மற்றும் மெட்ராஸ் மலர் ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது தாரா என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார்.

55
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?

இந்த நிலையில் மலையாளத்தில் டாக்டர் பென்னட் என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகும் ஆயிஷா தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மறைந்த நடிகர் ரகுவரனின் சகோதரர் ரமேஷ் மற்றும் புகழ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இதில் ஆயிஷாவிற்கு ஜோடியாக விடாமுயற்சி, ராவண கோட்டம், இரும்புத்திரை போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவை 14ஆம் தேதி காதலர் தினத்தட்டு பிரபல புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved