- Home
- Cinema
- திருமணத்துக்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாத சார்பட்டா வில்லன் மனைவி... நீச்சல் உடையில் அதகளம் பண்ணும் பூஜா
திருமணத்துக்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாத சார்பட்டா வில்லன் மனைவி... நீச்சல் உடையில் அதகளம் பண்ணும் பூஜா
Pooja Ramachandran : நீச்சல் உடையில் நடிகை பூஜா ராமசந்திரன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்குகளையும் குவித்து வருகிறது.

சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர்ஜான் கொகேன். அவரது மனைவி பூஜா ராமச்சந்திரன் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர்.
நடிகை பூஜா ராமச்சந்திரன், தொகுப்பாளினியாக சின்னத்திரையில் தன்னுடைய கெரியரை துவங்கி, பின்னர் மாடலிங் துறையில் ஜொலித்து, நடிகையாக அறிமுகமாகி அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
இவரால் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், 'பீட்சா', 'காதலில் சொதப்புவது எப்படி', 'களம்', 'காஞ்சனா 2' போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பேமஸ் ஆனார்.
தமிழைத் தவிர தெலுங்கிலும், ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இயக்குனர் அட்லீ தயாரிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான, 'அந்தகாரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் பூஜா.
இவர் கடந்த 2010-ம் ஆண்டே பிரபல தொகுப்பாளர் கேரிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதைத்தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கொகேன் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பூஜா. திருமணத்துக்கு பின்னர், இவர்கள் இருவருமே சமூக வலைத்தளங்களில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் நடிகை பூஜா ராமசந்திரன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்குகளையும் குவித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... பிரபல நிகழ்ச்சியின் பெயரை படத்துக்கு தலைப்பாக வைக்கும் சுந்தர் சி... எல்லாத்துக்கும் அவங்க தான் காரணமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.