அடேங்கப்பா பெரிய தயரிப்பாளர்கள் எடுக்காத முடிவை கையில் எடுத்த லெஜண்ட்
சரவணன் அருள் தனது முதல் படத்தை ஓடிடிக்கு விற்க விரும்பவில்லை என கூறி இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

தொழிலதிபரான சரவணன் அருள்.தற்போது நடிகராகவும் பரிமாணித்து விட்டார். தி லெஜெண்ட் என்னும் படத்தை நடித்ததன் மூலம் மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். முன்னதாக அவரது சரவணா ஸ்டோருக்காக பல விளம்பரங்களில் தோன்றி விமர்சனங்களை பெற்றார். இருந்தும் மனம் தளராத இவர் ஜேடி, ஜெர்ரி என இரு இயக்குனர்கள் மூலம் தி லெஜெண்ட் என்னும் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் தான் விவேக் இறுதியாக தோன்றியிருந்தார். வெளிநாட்டிலிருந்து வரும் விஞ்ஞானி ஒருவர் உள்நாட்டு விவசாயத்திற்காக போராடும் கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது. இதில் பாலிவுட் நாயகி ஊர்வசி ராவ்டேலா நாயகியாக தோன்றியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...ரஜினி... விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா?’ உணர்ச்சி வசப்பட்ட கூல் சுரேஷ்
The Legend
சிவாஜி பட ரஜினிகாந்த் பாணியில் அமெரிக்காவிலிருந்து களமிறங்கி இருந்தார். இந்த படத்திற்காக பல கோடி ரூபாயை இன்வெஸ்ட் பண்ணி இருந்தார். ஆனால் படம் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்பட்டது. இருந்தாலும் 40 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக சரவணன் அருள் கூறினார்.
the legend
பிரபு, விவேக், விஜயகுமார், சுமன், யோகி பாபு, ரோபோ சங்கர் என முக்கிய நடிகர்களுடனும் தொழில்நுட்ப கலைஞர்களையும் களம் இறக்கி இருந்த சரவணன் அருள் தனது முதல் படத்தை ஓடிடிக்கு விற்க விரும்பவில்லை. சமீபத்தில் வெளியாகிய ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படங்கள் கூட தற்போது ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் சரவணன் அருள் தனது முதல் படத்தை ஓடிடிக்கு விற்க விரும்பவில்லை என கூறி இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
மாப்பிள்ளை மரியாதை கிடைக்காமல் அசிங்கப்படும் கோபி..இன்றைய எபிசோட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.