MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோடிகளில் புரளும் பாலிவுட் நடிகர்! சொத்து எவ்வளவு இருக்குன்னு தெரியுமா?

கோடிகளில் புரளும் பாலிவுட் நடிகர்! சொத்து எவ்வளவு இருக்குன்னு தெரியுமா?

Sanjay Dutt Net Worth: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பல மாறுபட்ட வேடங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். அவரிடம் உள்ள விலை மதிப்பற்ற பொருள்கள் என்னென்ன? ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு? அவருடைய சொத்து மதிப்பு என்ன? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Dec 12 2024, 12:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sanjay Dutt Net Worth

Sanjay Dutt Net Worth

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பல மாறுபட்ட வேடங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். மும்பையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, துபாயில் ஒரு பங்களா, விலை உயர்ந்த வாட்ச்கள், சொகுசு கார்கள் என பல ஆடம்பர வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரிடம் உள்ள விலை மதிப்பற்ற பொருள்கள் என்னென்ன? ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு? அவருடைய சொத்து மதிப்பு என்ன? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Sanjay Dutt Income

Sanjay Dutt Income

சுமார் 40 ஆண்டுகளாக 135 படங்களுக்கு மேல் நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தி சினிமாவில் மிகவும் புகழ்பெற்றவர். பாலிவுட் தவிர, தென்னிந்திய திரையுலகிலும் நடித்துள்ளார். யாஷின் KGF 2ஆம் பாகம், விஜய்யின் லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தார். பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சஞ்சய் தத், வலுவான வணிக போர்ட்ஃபோலியோவையும் வைத்திருக்கிறார்.

36
Sanjay Dutt Assets

Sanjay Dutt Assets

பொதுவில் கிடைக்கும் தரவுகளின்படி சஞ்சய் தத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.295 கோடி. ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமான லியோ படத்தில் 8 கோடி ரூபாய் வாங்கினார் என்று கூறப்படுகிறது. வெளிவரவிருக்கும் டபுள் ஐஸ்மார்ட் படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா மற்றும் விளம்பரங்களில் இருந்து வரும் வருமானத்தைத் தவிர, பல வணிகங்களிலும் முதலீடு செய்துள்ளார். சஞ்சய் தத் புரொடக்ஷன்ஸ் மற்றும் த்ரீ டைமன்ஷன் மோஷன் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களை சஞ்சய் தத் நடத்தி வருகிறார். ஜிம்ஆஃப்ரோ (ZimAfro) T10 தொடரில் ஹராரே ஹரிகேன்  (Harare Hurricane), LPL தொடரில் பி-லவ் கண்டி (B-Love Kandy) கிரிக்கெட் அணிகளின் இணை உரிமையாளராக இருக்கிறார்.

டான்டவுன், சைபர் மீடியா இந்தியா போன்ற பல்வேறு ஸ்டார்ட்-அப்களிலும் சஞ்சய் தத் முதலீடு செய்துள்ளார். கார்டெல் & பிரதர்ஸ் என்ற மதுபான ஸ்டார்ட்-அப் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனம் தி க்ளென்வாக் என்ற ஸ்காட்ச் விஸ்கியை அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ.1,550.

46
Sanjay Dutt Salary

Sanjay Dutt Salary

சஞ்சய் தத், அவரது மனைவி மானயதா தத் மற்றும் அவர்களது இரட்டையர்களான இக்ரா மற்றும் ஷஹ்ரான் ஆகியோர் தற்போது மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸில் அமைந்துள்ள ஒரு பங்களா வீட்டில் வசிக்கின்றனர். இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி. அவரது குழந்தைகள் தற்போது துபாய் படிக்கின்றனர். இதனால் சஞ்சய் தத் துபாயில் ஒரு ஆடம்பரமான வீட்டையும் வைத்திருக்கிறார். அடிக்கடி துபாய்க்கும் மும்பைக்கும் பயணம் செய்கிறார்.

56
Sanjay Dutt Cars

Sanjay Dutt Cars

சஞ்சய் தத் சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் மீது ஈடுபாடு கொண்டவர். ரூ.6.95 கோடி முதல் 7.95 கோடி வரையிலான ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட், ரூ.2.99 கோடி விலையில் லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, ரூ.2.72 கோடி விலையில் ஆடி ஆர்8, ரூ.1.3 கோடி விலையில் ஃபெராரி 599 ஜிடிபி போன்றவை இவரது கார் சேகரிப்பில் உள்ளன. சஞ்சய் தத் எப்போதும் பயன்படுத்தும் காரின் நம்பர் பிளேட் எண் 4545 ஆக இருந்தது. 2022 இல், அதை 2999 ஆக மாற்றினார்.

66
Sanjay Dutt Watches

Sanjay Dutt Watches

சஞ்சய் தத் ஆடம்பர வாட்ச்களின் ரசிகரும்கூட. ரோலக்ஸ் வாட்ச்களை நிறைய வாங்கி வைத்திருக்கிறார். இவரது ஆடம்பரமான வாட்ச் சேகரிப்பில் ரூ. 64 லட்சம் விலையுள்ள ரோஜர் டுபியூஸ் எக்ஸ்காலிபர் டபுள் டூர்பில்லன், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் காஸ்மோகிராஃப் டேடோனா வித் லியோபார்ட் டயல், ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஆடெமர்ஸ் பிக்யூட் ராயல் ஓக் ஆஃப்ஷோர் க்ரோனோகிராஃப், ரூ.28 லட்சத்துக்கு வாங்கிய ரோலக்ஸ் யாச்ட்-மாஸ்டர் II ஆகியவை உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved