வணங்கான் பார்த்து அழுது அழுது தலைவலியே வந்துருச்சு – கண்கலங்கி பேசிய சங்கீதா!
Sangeetha Krish Share Her Feelings After Watch Vanangaan : வணங்கான் படத்தை பார்த்த எனக்கு அழுது அழுது தலைவலியே வந்துவிட்டது என்று நடிகை சங்கீதா கூறியுள்ளார்.
Vanangaan Box Office Collection, Sangeetha Krish
Sangeetha Krish Share Her Feelings After Watch Vanangaan : இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் வணங்கான். ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் வணங்கான். இயக்குநர் பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இருவரும் இணைந்து தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Arun Vijay Movie Vanangaan
வாய் பேச முடியாத, கேது கேளாத கோட்டி (அருண் விஜய்), தனது தங்கை தேவி (ரிதா) உடன் கன்னியாகுமரி வசித்து வருகிறார். 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியால் இருவரும் தங்களது பெற்றோரை இழந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்ட பாதிரியார் தனது தேவாலயத்தில் தங்க வைத்து எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். அதன் பிறகு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணத்தை வேலை செய்து சம்பாதிக்கிறார் கோட்டி. அப்படி அவர் வேலை பார்க்க சென்ற ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்கிறார். இதையடுத்து காவல் துறையில் சரண்டராகவும் செய்கிறார்.
Sangeetha Talk About Vanangaan Movie Feelings
அதன் பிறகு அவருக்கு தண்டனை கிடைத்ததா? அல்லது விடுதலை செய்யப்பட்டாரா என்பதுதான் படத்தோட கிளைமேக்ஸ். இதில், அருண் விஜய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு ஜாலியான ரோலில் ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ளார். ஆனால், அவர்களது காதல் காட்சி அந்தளவிற்கு இல்லை என்றாலும் கூட முதல் பாதியில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் கதைக்கு வருகிறார் பாலா.
Vanangaan, Arun Vijay, Sangeetha Krish
முதல் பாதி மெதுவாக சென்றாலும், 2ஆம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. நீதிபதியாக வரும் மிஷ்கினும் சரி, போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியும் சரி இருவரும் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்த வணங்கான் வெளியாகி 5 நாட்களில் ரூ.4.54 கோடி வசூல் குவித்ததாக sacnilk வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தைப் பார்த்த சங்கீதா கதறி அழுததாக கூறியிருக்கிறார்.
Vanangaan Box Office Collection
இது குறித்து ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியிருப்பதாவது: வணங்கான் படத்தை பார்த்த என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. இது போன்ற சம்பவம் இன்னும் நடக்கிறதா என்று பாலாவிடம் நான் கேட்டேன். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம் தான் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. அழுது அழுது தலைவலி வந்தது தான் மிச்சம் என்று கண் கலங்கியபடி கூறியிருக்கிறார். ஏற்கனவே பாலா இயக்கத்தில் வந்த பிதாமகன் படத்தில் சங்கீதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.