சமந்தாவின் சிறு வயது கிரஸ் யார் தெரியுமா?..நாயகியின் கலர்புல் கனவுகள்!
அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்தது, எல்லா பெண்களுக்கும் இருக்கிற அந்த உணர்வுதான் எனக்கும் இருந்தது சூர்யாவை பார்க்கும் போது என கூறியுள்ளார் சமந்தா.

samantha
காத்து வாக்குல ரெண்டு காதலை தொடர்ந்து யசோதா, சகுந்தலம் , விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என அடுத்தடுத்தது கமிட் ஆகியுள்ளார் சமந்தா. யசோதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதியும், குஷி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
samantha
குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. இந்த படம் அரவிந்த் சாமி ரோஜா பட கதையம்சத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக காஷ்மீரில் நடைபெற்ற சூட்டிங்கில் புகைப்படங்கள் வைரலாகின.
samantha
சூட்டிங் முடிந்து திரும்பிய சமந்தா மீண்டும் ஒர்கவுட் மோடுக்கு திரும்பி சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த படத்தில் ஒர்கவுட் முடிந்து அமர்ந்திருந்த சமந்தாவின் பக்கத்தில் அவரது வளர்ப்பு நாய்கள் இருந்தன. அந்த போட்டோவிற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் நாய், பூனைகளுடன் மட்டும் இருந்து சாகப்போறியா என கேட்க. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என பதிவிட்டு மூக்கை உடைத்திருந்தார்.
samantha
இந்நிலையில் சமந்தாவின் சிறு வயது கிரஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது சமந்தா கல்லூரி காலங்களில் சூர்யாவின் தீவிர ரசிகையாக இருந்திருக்கிறார். இருவரும் இணைந்து அஞ்சான் படத்தில் நடித்தது தனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்தது என்று கூறினார். எல்லா பெண்களுக்கும் இருக்கிற அந்த உணர்வுதான் தனக்கும் இருந்தது என்றும் கூறியுள்ளார் சமந்தா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.