யங் ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ண ஆசைப்படும் சமந்தா..! அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?
காதல் பொங்கி வழியும் கதாபாத்திரம் முதல், அனைவரும் மிரள வைக்கும் கதாபாத்திரங்கள் என, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா, யங் ஹீரோ ஒருவருடன் ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் 'தி ஃபேமிலிமேன் 2 ' தொடரில் நடித்து முடித்துள்ளார்.
இந்த வெப் தொடர், ஜூன் 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த தொடரில் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என, வைகோ, சீமான், போன்ற அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் வைகோ கடிதம் எழுதியுள்ளார். எனவே இந்த தொடர் அறிவித்ததை போல்... ஒளிபரப்ப படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து இவரது கைவசம் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் காதுவாக்குல ரெண்டு காதல், மற்றும் சகுந்தலா ஆகிய படங்கள் உள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் திரையுலகில் தனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூருடன் ஒரே ஒரு ரொமாண்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை பாலிவுட் திரையுலகின் பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்த சமந்தாவின் பார்வை பாலிவுட் திரையுலகின் பக்கம் திரும்பியுள்ளது.
விரைவில் அவர் ஆசை பட்டது போல் ரன்பீர் கபூருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க வேண்டும், என்ற சமந்தாவின் ஆசை நிறைவேற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.