யாரும் எதிர்பார்க்காத புதிய அவதாரம் எடுத்து மிரட்ட தயாரான சமந்தா..! எகிறும் எதிர்பார்ப்பு..!
காதல் பொங்கி வழியும் காதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதை உருக வைத்த சமந்தா யாரும் எதிர்பார்க்காத கெட்டப்பில், மிரட்ட தயாராகியுள்ளார். இதுகுறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் 'தி ஃபேமிலிமேன் 2 ' தொடரில் நடித்து வருகிறார்.
இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்புகள் சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
திருமணத்திற்கு பின், தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தாலும்... அவ்வப்போது வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.
அந்த வகையில், ஏற்கனவே தமிழில் விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள' படத்தில், இரட்டை வேடங்களில் ஒரு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். மேலும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து பத்திரிகையாளர்களின் பாராட்டை பெற்றிருந்தார்.
இதை தொடர்ந்து முழு நீல வெப் தொடர் ஒன்றில்... சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே இந்த வெப் தொடரை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.
மேலும் சமீபத்தில் சமந்தா கொரோனா தொற்று பரவி வருவது குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில்... " நம்பிக்கை நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும்".
கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத் திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வைரஸை எதிர்த்துப் போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். கஷ்டம் வந்துவிட்டது என்று உயிரை மாய்த்துக் கொள்வது, கொரோனா வந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது.
தைரியம் மட்டும் இழக்கவே கூடாது... தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோருக்கும் போட்டு முடிகிற காலம் விரைவில் வரும்.
அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் ஜெயித்து விடலாம் நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் அதைத்தாண்டி வருவோம் என்று கூறியுள்ளார்.