MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha : 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமந்தா.. தமிழ் ரசிகர்களுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கப்போகிறாரா?

Samantha : 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமந்தா.. தமிழ் ரசிகர்களுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கப்போகிறாரா?

Samantha Host Tamil Program : நடிகை சமந்தா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி வந்திருக்கு. தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமந்தா, இப்போ புதுசா ஒரு சவாலை கையில் எடுத்திருக்காங்க. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 22 2026, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Celebrity MasterChef Tamil
Image Credit : Instagram, Filmfare

Celebrity MasterChef Tamil

நடிகை சமந்தா தற்போது தனது திரைப்பயணத்துடன் சேர்த்து புதிய முயற்சியிலும் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், பிரபலமான சமையல் ரியாலிட்டி ஷோவான ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் அவர் இணைந்துள்ளதாகவும், இதற்கான படப்பிடிப்பை சமந்தா தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கிற்காக சமந்தா சென்னை வந்துள்ளதாகவும், தயாரிப்பு குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இருப்பினும், நிகழ்ச்சியில் சமந்தா எந்தப் பொறுப்பில் இடம்பெறுகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Samantha Baby Shower: வைரலாகும் சமந்தாவின் வளைகாப்பு போட்டோஸ்... 'பாரம்பரியத்தில் ஒரு சக்தி இருக்கு' என நெகிழ்ச்சி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சமையல் களத்தில் களமிறங்கும் பிரபலங்கள்
Image Credit : instagram

சமையல் களத்தில் களமிறங்கும் பிரபலங்கள்

சினிமா மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் சமந்தா, தற்போது சமையல் மற்றும் பொழுதுபோக்கு இணைந்த இந்த ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. உணவு என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய அம்சம் என சமந்தா ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி அவருக்கு வித்தியாசமான அனுபவமாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. கேமரா முன் நடிப்பில் அசத்தும் நட்சத்திரங்கள், சமையல் களத்தில் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதே நிகழ்ச்சியின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.

34
சமந்தா சொன்ன சுவாரஸ்யமான விஷயம்
Image Credit : Instagram

சமந்தா சொன்ன சுவாரஸ்யமான விஷயம்

தனக்கு பிடித்த தமிழ் பிரபலங்கள் சமையல் செய்யும்போது அவர்கள் செய்யும் தவறுகளையும், புதிதாக முயற்சி செய்யும் விஷயங்களையும் பார்ப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக சமந்தா கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் முழு பட்டியல் குறித்த தகவலை அவர் இதுவரை வெளியிடவில்லை.

உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர்செஃப்’ வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தமிழ் பதிப்பு உருவாகிறது. பான்ஜாய் ஏசியா நிறுவனம் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக பிரபலங்களையும், தமிழகத்தின் உணவு மற்றும் கலாச்சார அம்சங்களையும் இணைத்து புதிய வடிவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

44
புதிய கட்டத்திலும் தொடரும் சமந்தாவின் பயணம்
Image Credit : instagram/samantharuthprabhu

புதிய கட்டத்திலும் தொடரும் சமந்தாவின் பயணம்

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் இருக்கும் சமந்தா, தொடர்ந்து பணியிலும் கவனம் செலுத்தி வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைத் தொடர்ந்து, தற்போது தொலைக்காட்சி மற்றும் ரியாலிட்டி ஷோ என தனது பயணத்தை விரிவுபடுத்துகிறார்.

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சி விரைவில் சோனி விழா தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சமந்தாவின் பங்கு என்னவாக இருக்கும், தமிழ் சினிமா பிரபலங்கள் சமையல் போட்டியில் எப்படி கலக்கப் போகிறார்கள் என்பதற்கு நிகழ்ச்சி தொடங்கிய பிறகே விடை கிடைக்கும்.

Samantha-வின் குழந்தைக்கு போட்டிபோட்டு பெயர் வைத்த ரசிகர்கள்... சமந்தா செலக்ட் பண்ணியது இந்த பெயர்தான்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth: ரஜினிக்காக மைக்கேல் ஜாக்சன் பாட இருந்தாரா? 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்
Recommended image2
Vijay - Ajith: முதல்வர் விஜய்க்கு அஜித் எழுதிய கடிதம்.. ஒரே பாராட்டு மழை! அப்படி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
Recommended image3
Raaka : அட்லீ படத்திற்கு கிடைத்த வேர்ல்டு லெவல் அங்கீகாரம்... ‘ராக்கா’ படைத்த கின்னஸ் சாதனை என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
Now Playing
Samantha: சமந்தாவுக்கு சிம்பிளா நடந்து முடிந்த வளைகாப்பு... குழந்தை எப்போ பிறக்கப்போகுது தெரியுமா?
Recommended image2
Samantha : 'மறுபடியும் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்குறேன்' - குட் நியூஸ் சொன்ன சமந்தா; குவியும் வாழ்த்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved