ஹாலிவுட்டுக்கு செல்கிறாரா சமந்தா? புது லுக்கை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகை சமந்தா வித்தியாசமான ஹேர்ஸ்டைல் உடன் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

சமந்தாவின் புதிய தோற்றம்
மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமந்தா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது அவர் தமிழ், தெலுங்கில் நடிக்கவில்லை. தென்னிந்திய திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். விரைவில் மும்பையிலேயே அவர் குடியேறப்போவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் சமந்தாவின் 'சிட்டாடல்' வெப் தொடர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
சமந்தாவின் ஹாலிவுட் அறிமுகம்?
சமந்தா பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், சமந்தாவின் அதிர்ச்சிகரமான தோற்றம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான ஹேர் ஸ்டைல் உடன் சமந்தா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மீண்டும் காதல் வலையில் விழுந்த சமந்தா: யார் அந்த காதலன்?
ஆளே மாறிய சமந்தா
இது உண்மையில் சமந்தா தானா என்கிற கேள்வியும் எழும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாதபடி, தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார் சமந்தா. குட்டையான கூந்தலுடன் ஒரு ஆண் போல தோற்றமளிக்கிறார். இந்தப் புதிய தோற்றம் சினிமாவுக்காக அல்ல, ஒரு பிரபல ஹாலிவுட் பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக சமந்தா இப்படி மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக அவர் இவ்வாறு போட்டோஷூட் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹாலிவுட்டுக்கு படையெடுக்கும் நடிகைகள்
ஏற்கனவே நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஸ்ருதிஹாசன், சோபிதா துலிபாலா ஆகியோர் படிப்படியாக ஹாலிவுட் நோக்கி நகர்ந்து வருவதால் நடிகை சமந்தாவின் அடுத்த டார்கெட்டும் ஹாலிவுட்டாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க தயார் என்பதை சூசகமாக அறிவிக்கும் விதமாக தான் அவர் இவ்வாறு விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவரின் ஹாலிவுட் அறிமுகம் எப்போது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்....பெண்கள் விவாகரத்து பெற்றால் அவர்கள் செக்ண்ட் ஹேண்ட் தான், சாகும் வரை இருக்கும்: சமந்தா!