MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!

Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!

Samantha replace Sai Pallavi : நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது தயாரிப்பில் உருவாகும் 'மா இன்டி பங்காரம்' படத்திற்கு முதலில் நடிகை சாய் பல்லவி தான் தேர்வாகியிருந்தார் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 08 2026, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samantha Ruth Prabhu reply for Haters
Image Credit : Instagram

Samantha Ruth Prabhu reply for Haters

தென்னிந்திய சினிமாவின் 'குயின்' சமந்தா ரூத் பிரபு, அடுத்ததாக 'மா இன்டி பங்காரம்' படம் மூலம் மீண்டும் திரையில் கலக்க தயாராகி வருகிறார். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, ரசிகர்களுடன் நடத்திய கேள்வி-பதில் செஷனில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தன்னை வெறுப்பவர்கள் (ஹேட்டர்ஸ்) பற்றி அவர் கொடுத்த ஒரு பதில் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹேட்டர்ஸ்-க்கு பதிலடி கொடுத்த சமந்தா
Image Credit : Instagram

ஹேட்டர்ஸ்-க்கு பதிலடி கொடுத்த சமந்தா

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், "உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?" என்று கேட்டிருந்தார். இதற்கு சமந்தா கோபமாகவோ அல்லது சீரியஸாகவோ பதில் சொல்லாமல், ஒரு சின்ன புன்னகையுடன் ரொம்பவே ஜாலியாக பதிலளித்தார். "ஹேட்டர்ஸ்-ஆ? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன?" என்று ஜாலியாக அவர் திருப்பிக் கேட்டார். எந்த ஒரு நெகட்டிவிட்டியையும் கண்டுகொள்ளாமல் சமந்தா கொடுத்த இந்த பாசிட்டிவான பதில், ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

Related Articles

Related image1
Samantha: 15 வருஷமா சகிச்சிட்டு இருக்கேன்... கணவர் பற்றி முதல்முறையாக பேசிய சமந்தா...!
Related image2
சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?
35
சாய் பல்லவிதான் முதல் சாய்ஸ்!
Image Credit : Instagram

சாய் பல்லவிதான் முதல் சாய்ஸ்!

இதே உரையாடலில் சமந்தா ஒரு பெரிய சீக்ரெட்டையும் உடைத்துள்ளார். 'மா இன்டி பங்காரம்' படத்தின் கதாநாயகி தேர்விற்கு படக்குழு முதலில் நடிகை சாய் பல்லவியை தான் அணுகியதாம். ஆனால், சாய் பல்லவியின் டேட்ஸ் பிரச்சினை காரணமாக, அந்த வாய்ப்பு கடைசியாக சமந்தாவுக்கு வந்துள்ளது. இதுபற்றி பேசிய சமந்தா, "நான் இந்தப் படத்தை தேர்ந்தெடுக்கவில்லை, இந்தப் படம் தான் என்னைத் தேர்ந்தெடுத்தது" என்று எமோஷனலாகக் கூறினார். மேலும், தனது கேரக்டருக்கு ஏற்றவாறு படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சாய் பல்லவியைப் பாராட்டிய சமந்தா, எதிர்காலத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்தார்.

45
'மா இன்டி பங்காரம்' படத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
Image Credit : Instagram

'மா இன்டி பங்காரம்' படத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

இந்தப் படத்தில் சமந்தா ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக வருவது மட்டுமல்லாமல், அநீதிக்கு எதிராகப் போராடும் ஒரு வலிமையான ஃபைட்டராகவும் மிரட்டப் போகிறார். இது ஒரு காமெடி கலந்த ஆக்‌ஷன் டிராமாவாக இருக்கும் என்றும், சமந்தாவின் கேரக்டருக்கு பல பரிமாணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக சமந்தா நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஒரு ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால், கன்னடாவின் பிரபல நடிகர் திகாந்த் மன்சாலே இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் குல்ஷன் தேவையா, கௌதமி தடிமல்லா, ஸ்ரீமுகி மற்றும் மஞ்சுஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

55
ரிலீஸ் எப்போ?
Image Credit : Instagram

ரிலீஸ் எப்போ?

சமந்தாவே இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமான்க் ரெட்டி ஆகியோருடன் இணைந்து தனது சொந்த பேனரில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப் படம், 2026 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், சமந்தாவின் இந்த 'கம் பேக்' படமும், அவரது சுவாரஸ்யமான பதில்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
சாய் பல்லவி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image2
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Recommended image3
Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?
Related Stories
Recommended image1
Samantha: 15 வருஷமா சகிச்சிட்டு இருக்கேன்... கணவர் பற்றி முதல்முறையாக பேசிய சமந்தா...!
Recommended image2
சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved