- Home
- Cinema
- சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?
சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?
Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சமந்தா ரூத் பிரபு:
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், தனக்கென தனி அடையாளம் பதித்தவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது வித்தியாசமான நடிப்பு மற்றும் திறமை போன்றவை இவரது முன்னணி இடத்திற்கு கொண்டுவந்தது. முன்னணி ஹீரோயினாக இருந்த போதே... தன்னுடைய கேரியரை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் நடிப்புக்கு ஃபுல் ஸ்டாப் வைக்காமல், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். பின்னர் விவாகரத்து, மயோசிட்டிஸ் பிரச்சனை என பல சவால்களையும் கடந்து, தற்போது வரை நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த 5 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புஷ்பா: த ரைஸ்
கடந்த 2021-ஆம் ஆண்டு, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இந்த படத்தை, இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். ஹீரோயினாக ரஷ்மிகா மனிதனா நடித்திருந்தாலும், 'ஊ சொல்றியா மாமா' என்கிற ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலம், ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அல்லு அர்ஜுனுக்கு நிகராக சமந்தாவுக்கும் கட்டவுட் வைத்து சமந்தாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள். இந்த திரைப்படம் ரூபாய் 365 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.
ரங்கஸ்தலம்:
கடந்த 2018-ஆம் ஆண்டு, தெலுங்கில் கிராமத்து பின்னணியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் ரங்கஸ்தலம். ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், சமந்தா ராமலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குடும்பம், காதல் மற்றும் காமெடிய என தனித்துவமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்தது. சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில், இப்படம் முக்கிய படமாகவும் அமைந்தது. இந்த திரைப்படம் ரூபாய் 214 கோடி வசூலை ஈட்டியது.
தெறி
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மித்ரா என்கிற மருத்துவர் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட் படமான தெறி சுமார் ரூபாய் 150–160 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
மகாநடி
2018 -ஆம் ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மகாநடி. இந்த படத்தில், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்றாலும்... சமந்தாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது திறமையான நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. மேலும் இந்த திரைப்படம், ரூபாய் 85 முதல் 90 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
யே மாயா சேசவே:
சமந்தாவின் திரையுலக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்த திரைப்படம் என்றால் அது, தெலுங்கில் இவர் ஹீரோயினாக அறிமுமாகமான 'யே மாயா சேசவே ' திரைப்படம். 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் தான் இந்த படம். சிம்பு நடித்த ஹீரோ ரோலில் நாகா சைதன்யா நடிக்க, திரிஷா நடித்த வேடத்தில், சமந்தா நடித்திருந்தார். கெளதம் மேனன் இயக்கி இருந்த இந்த படம் ரூபாய் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.