முதல் முறையாக நாகா சைதன்யா பிரிவு குறித்து மனம் திறந்த சமந்தா
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்து சமந்தா பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

samantha
பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹரின் பிரபல பேச்சு நிகழ்ச்சியான ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு கலந்து கொண்டுள்ளார். . முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமந்தா நிகழ்ச்சியில் தெரிவித்தது யூகத்தை கிளப்பியுள்ளது.
samantha
'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் விவகாரத்திற்கான காரணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சமந்தா, மிகவும் பணிவுடன் பதிலளித்தார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் செய்திகளுக்கு...யோகாவில் அசத்தும் கரீனா கபூர் முதல் ஜான்வி கபூர் வரை..வில்லாக வளையும் பாலிவுட் நாயகிகள்
samantha
நடிகை நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தபோது எப்படி உணர்ந்தார் என்பதை வெளிப்படுத்தியிருந்தாலும், விவாகரத்துக்கான காரணத்தை அவர் ரகசியமாக வைத்திருந்தார். அவர்கள் பிரிந்ததற்கான காரணம் அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது, இரு தரப்பினரும் இதுவரை எதுவும் கூறவில்லை.
samantha
இந்த நிகழ்ச்சியில் விவாகரத்து குறித்த காரணத்தை சமந்தா கூறியிருப்பதாக வெளியான தலைப்பு தற்போதைக்கு அனைவரின் ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. ஜூலை மாதம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'காஃபி வித் கரண்' வெளியாகிறது.
மேலும் செய்திகளுக்கு...vijay sethupathi : விக்ரம் படத்தில் தொப்பையை காட்டி நடிச்சதுக்கு காரணம் இதுதான் - விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்
samantha
சமீபகாலமாக கவர்ச்சி புயல் வீசி வரும் சமந்தா நடிகர் நாக சைதன்யா தெலுங்கு நடிகை ஷோபிதா என்பவரை தற்போது காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்றதாகவும் வெளியான செய்திகள் தவறு என ஒரு செய்தி நிறுவனம் குறிப்பிட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் “பெண்ணைப் பற்றிய வதந்திகள் எல்லாம் உண்மையாகவே இருக்கும். ஆணைப் பற்றிய வதந்திகளை பெண் தான் பரப்புகிறாள். என்னது இதெல்லாம். சம்பந்தப்பட்ட நாங்களே இதில் இருந்து கடந்து சென்றுவிட்டோம். நீங்களும் அதை செய்ய வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...கணிதத்தில் நூறு.. படிப்பில் சூர்யா மகள் படுஜோரு- தியாவின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா