கணிதத்தில் நூறு.. படிப்பில் சூர்யா மகள் படுஜோரு- தியாவின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா
Suriya Daughter 10th mark : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சூர்யாவின் மகள் தியா எவ்வளவு மதிப்பெண் வாங்கி உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா. சினிமாவில் ஜோடியாக நடித்த போது காதலிக்கத் தொடங்கிய இந்த ஜோடி, கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளார்.
சூர்யாவின் குடும்பமே சினிமாவில் இருந்தாலும், அவர் தனது குழந்தைகளை இதுவரை சினிமாவில் நடிக்க வைக்கவில்லை. இருவரும் படிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். சூர்யாவின் மகள் தியா தற்போது 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதில் சூர்யாவின் மகள் தியா எவ்வளவு மதிப்பெண் வாங்கி உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழில் 95 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும், கணிதத்தில் 100 மதிப்பெண்ணும், அறிவியலில் 98 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்ணும் பெற்றும் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி உள்ளாராம்.
எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்ணை மகள் பெற்றுள்ளதால் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்களாம். பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருபவர் சூர்யா. அவரின் மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதேபோல் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் மூலம் கலவி உதவி பெற்று பயின்ற ஏராளமான மாணவர்களும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளதால் நடிகர் சூர்யா இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.
இதையும் படியுங்கள்... samantha : உங்க வேலையை மட்டும் பாருங்க... நாக சைதன்யா பற்றிய வதந்தியால் கடுப்பான சமந்தா