samantha : உங்க வேலையை மட்டும் பாருங்க... நாக சைதன்யா பற்றிய வதந்தியால் கடுப்பான சமந்தா
samantha : நாக சைதன்யாவின் புகழுக்கு குந்தகம் ஏற்படுத்தவே அவர் குறித்து பொய்யான செய்திகளை சமந்தா தரப்பி பரப்பி வருவதாக சமூக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா, கடந்தாண்டு அக்டோபர் மாதம் அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். திருமணமான 4 ஆண்டுகளில் இந்த காதல் ஜோடி விவாகரத்து செய்து பிரிந்தது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து இருவரும் அவரவர் வேலகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே நடிகர் நாக சைதன்யா தெலுங்கு நடிகை ஷோபிதா என்பவரை தற்போது காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது சமந்தா தரப்பில் இருந்து பரப்பப்பட்ட செய்தி என்றும், நாக சைதன்யாவின் புகழுக்கு குந்தகம் ஏற்படுத்த அவர் இவ்வாறு செய்து வருவதாகவும் சமூக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து கடுப்பான நடிகை சமந்தா, டுவிட்டரில் கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “பெண்ணைப் பற்றிய வதந்திகள் எல்லாம் உண்மையாகவே இருக்கும். ஆணைப் பற்றிய வதந்திகளை பெண் தான் பரப்புகிறாள். என்னது இதெல்லாம். சம்பந்தப்பட்ட நாங்களே இதில் இருந்து கடந்து சென்றுவிட்டோம். நீங்களும் அதை செய்ய வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலளிக்காமல் அவற்றை தவிர்த்து விடுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.... புது வீட்டில் பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் டேட்டிங்... காத்துவாக்குல 2-வது காதல் செய்யும் நாக சைதன்யா