- Home
- Cinema
- முதல் இடம் சமந்தாவிற்கு மூன்றாம் இடம் நயனுக்கு ..பாலிவுட் நாயகிகளை பின்னுக்கு தள்ளிய ரகசியத்தை சொன்ன நாயகி!
முதல் இடம் சமந்தாவிற்கு மூன்றாம் இடம் நயனுக்கு ..பாலிவுட் நாயகிகளை பின்னுக்கு தள்ளிய ரகசியத்தை சொன்ன நாயகி!
தான் முன்னணிக்கு வந்ததற்கு காரணம் ஓரோமேக்ஸ் நிறுவனத்திற்கு தான் அதிக பணத்தை கொடுத்ததாக சமந்தா சமீபத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

samantha
தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக உள்ளவர் சமந்தா. தெலுங்கு நடிகையான இவர் தமிழ் படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களை பெற்றவர். ராஜமௌலின் ஈ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்ற இவர் முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.
samantha
சமீபத்தில் புஷ்பா படத்தில் ஊ சொல்ட்ரியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இவர் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரவேற்பு பெற்றிருந்தார். இந்த படம் நல்ல வசூலையும் பெற்றிருந்தது. படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Suriya Birthday : "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்றவை " சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோகன்லால்
samantha
இதற்கிடையே நாக சைதன்யா உடன் விவாகரத்து பெற்ற பிறகு கவர்ச்சி கடலில் குதித்து விட்ட சமந்தா அவ்வப்போது குதூகலமான புகைப்படங்களையும் தான் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...அட ரோலெக்ஸ விடுங்க பாஸ்.. காதலிக்கும்போதே ஜோதிகாவுக்காக சூர்யா முதன்முதலில் நடிச்ச கேமியோ ரோல் பற்றி தெரியுமா?
இந்நிலைகள் பிரபலமான பாலிவுட் நிகழ்ச்சியான காஃபி வித் கரனில் அக்ஷய் குமார் உடன் இவர் கலந்து கொண்ட ப்ரோமோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த ப்ரோமோவில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உடன் சமந்தா போட்ட நடனம் வெகுவாக கவர்ந்தது. அதோடு தான் எவ்வாறு முன்னணியில் வந்தேன் என்பது குறித்த சுவாரசிய தகவலையும் வெளிப்படையாக தெரிவித்து இருந்தால் சமந்தா.
samantha
ஓர்மாக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில் சமந்தா முதலிடத்திலும் ஆலியா பட் இரண்டாவது இடத்திலும், நயன்தாரா மூன்றாவது இடத்திலும், காஜல் அகர்வால் 4, தீபிகா படுகோன் 5, பூஜா ஹெக்டேவுக்கு 6, கீர்த்தி சுரேஷ் 7, கத்ரீனா கைஃப் 8, கியாரா அத்வானி 9,அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Suriya Birthday: நடிகர் சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரள வைத்த டாப் 5 திரைப்படங்கள்!
முன்னதாக தான் முன்னணிக்கு வந்ததற்கு காரணம் ஓரோமேக்ஸ் நிறுவனத்திற்கு தான் அதிக பணத்தை கொடுத்ததாக சமந்தா சமீபத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆழியாப்பட்டை எவ்வாறு பின்னுக்கு தள்ளினீர்கள் என்று கேட்டதற்கு இதற்கும் மிகப்பெரிய தொகையை தான் செலவிட்டிருக்கிறேன் என ஒரு குண்டையும் தூக்கி போட்டு உள்ளார் நடிகை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.