- Home
- Cinema
- பெரும் தொகை செலவிட்டே முதலிடம் பிடித்தேன்..தரவரிசை வெளியிடும் நிறுவனம் குறித்த உண்மையை உடைத்த சமந்தா!
பெரும் தொகை செலவிட்டே முதலிடம் பிடித்தேன்..தரவரிசை வெளியிடும் நிறுவனம் குறித்த உண்மையை உடைத்த சமந்தா!
சமீப காலமாக சமத்தா குறித்தான செய்திகள் சூடு பிடித்து வரும் நிலையில் தற்போது இவர் டாப் டென்னுக்கு வர பணம் கொடுத்ததே காரணம் எனக் கூறியிருப்பது மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

samantha
சமீபத்தில் சமந்தா கலந்து கொண்ட காபி வித் கரன் ஷோ ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சமந்தாவை அக்ஷய் குமார் தூக்கி ஆடிய வீடியோ வைரல் ஆனது. தற்போது எவ்வாறு முதலீடத்திற்கு வந்தார் என்பது குறித்து சமந்தா கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்..Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !
அந்த நிகழ்ச்சியில் அதாவது நீங்கள் முதலிடத்திற்கு வர என்ன செய்தீர்கள் என கேட்கப்பட்டதற்கு, உண்மையை சொல்லவேண்டுமென்றால் நான் Ormax மீடியாவிற்கு அதிக பணம் கொடுத்தே லிஸ்டில் முதலிடம் பிடித்தாக சொல்லியுள்ளார். அதோடு லிஸ்டில் ஆலியா பட்டை பின்னுக்கு தள்ளியது எப்படி என கேட்கப்பட்டதற்கு மிகப்பெரிய தொகையை கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
samantha
புஷ்பாவில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடுவதன் மூலம் உலக புகழ் பெற்றார். தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டாப் டென் நாயகிகளில் ஒருவராக இருந்தவர் குடும்பப் பாங்கான நாயகியாகவே ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
மேலும் செய்திகளுக்கு...ச்ச மிஸ் ஆகிடுச்சே... தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த தமிழ் படங்கள்
samantha
முன்னணி நாயகியாக இருந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் கரம் பிடித்தார்.பின்னர் இந்த ஆண்டு துவக்கத்தில் மணமுறிவு குறித்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவ்வப்போது ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வைரலாகி வருகிறார் சமந்தா.
மேலும் செய்திகளுக்கு...சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி
samantha
தற்போது ஃபேமிலி மேன் 2 வெப் தொடர்காக ரெடியாகி வரும் சமந்தா சண்டை பயிற்சி தொடர்பான ஒர்க் அவுட்டுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீப காலமாக சமத்தா குறித்தான செய்திகள் சூடு பிடித்து வரும் நிலையில் தற்போது இவர் டாப் டென்னுக்கு வர பணம் கொடுத்ததே காரணம் எனக் கூறியிருப்பது மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.