Samantha: நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்... மனவேதனையை 7 வழிகளில் சமாளிக்கும் சமந்தா!!
நடிகை சமந்தா (Samantha) மற்றும் நாக சைதன்யா (Naga Chaitanya) இருவரும் தென்னிந்திய திரையுலகில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடிய இளம் நட்சத்திர ஜோடியாக இருந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி இருவரும் ஒரே சமயத்தில் தங்களுடைய விவாகரத்து குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். காதல் கணவரின் நினைவுகளில் இருந்து மீள்வதற்கு நடிகை சமந்தா பின்பற்ற கூடிய 7 வழிமுறைகளை தான் இதில் பார்க்க போகிறோம்...
உருகி, உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது என்பது சாதாரண விஷயம் அல்ல... அவர்களது நிலையில் இருந்தால் மட்டுமே அந்த வலி புரியும். அப்படி தான் என்ன தான் சமந்தா ஒரு முன்னணி பிரபலமாக இருந்தாலும், கணவருடனான விவாகரத்து அவருக்கு அதிக வலியை ஏற்படுத்தியது.
ஒருவழியாக கணவர் நினைவுகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ள சமந்தா பின்வரும் ஏழு வழிமுறைகளை பின் பற்றி தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
ஆன்மீக யாத்திரை: கடந்த மாதம் சமந்தா தன்னுடைய ஓய்வு நாட்களை தன்னுடைய உயிர் தோழி ஷில்பா ரெட்டியுடன், ஆன்மீக யாத்திரையில் கழித்தார். குறிப்பாக ரிஷிகேஷ் சென்றார். உத்திரகாண்டில் உள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துதல்: பொதுவாக மனதில் கவலை குடியேறினால் பொழுது போக்கின் மீது பெரிதாக கவனம் செல்லாது, ஆனால் இது போன்ற விஷயங்களை கண்டிப்பாக சமந்தாவிடம் இருந்து கற்று கொள்ளத்தான் வேண்டும். தன்னுடைய கவலையை மறக்க ஓவியங்கள் வரைவதையும், நண்பர்களுடன் சைக்கிள் செய்வதையும், நண்பர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மற்றும் தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவது என தன்னை தானே மோட்டிவேட் செய்து கொண்டார் சமந்தா.
தன்னுடைய வீட்டு பணிகளில் கவனம்: தன்னுடைய வீட்டில், குறிப்பாக தன்னுடைய பணிகளை சமந்தா தானே கவனித்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். சமீபத்தில், சமந்தா தனது விலையுயர்ந்த அலமாரியை சுத்தம் செய்தார். அதில் சில விலையுயர்ந்த பைகள், ஆடைகள் மற்றும் காலணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கணவர் பெயர் நீக்கம்: ஜூலை மாதம், சமந்தா தனது சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து ‘அக்கினேனி’யை என்பதை நீக்கினார். நாக சைதன்யாவிடம் இருந்து பிரிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் தனது instagram பக்கத்தில் இருந்து 80 க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் கணவர் நினைவாக போட்டு கொண்ட டாட்டூக்களை நீக்கியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுதல்: சமந்தா ஏற்கனவே ஹாஷ் என்ற பிரெஞ்சு புல்டாக் வளர்த்து வந்த நிலையில், நாக சைதன்யா பிரிவுக்கு பின்னர் பிட்புல் என்ற புதிய நாய்க்குட்டியைப் வாங்கி வளர்த்து வருகிறார். அதற்கு சாஷா என்று பெயர் வைத்துள்ளார். ஹாஷ் மற்றும் சாஷா இருவரும் சமந்தாவுடன் மிகவும் நெருக்கமாக, பழகி வருகிறது. எனவே அவ்வப்போது தன்னுடைய செல்ல பிராணிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சினிமாவில் கவனம்: ஹிந்தியில் சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸுக்கு பின்னர், அடுத்தடுத்து பல ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் சமந்தாவுக்கு கிடைத்து வருகிறது. பாலிவுட்டில் சமந்தா அறிமுகமாகும் படத்தை டாப்ஸி தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வரும் இவர், சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார்.
நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்: கடந்த சில வாரங்களாக, சமந்தா தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் புகைப்படங்கள் பகிர்ந்து கொள்வதை பார்க்க முடிகிறது. பிறந்தநாள் மற்றும் பார்ட்டிகளை ரசித்துக்கொண்டு நேரத்தை செலவிடும் சமந்தா இந்த வருட தீபாவளியை தன்னுடைய தோழி ஷில்பா மற்றும் அவருடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.