பிக்பாஸுக்கு 1000 கோடி சம்பளமா? அப்படினா நான் வேலைக்கே போக மாட்டேன் : சல்மான் கான்
சமீபத்தில் பேட்டியளித்த சல்மான்..ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் நான் வேலைக்கே போக மாட்டேன் என கூறியுள்ளார்.
salman khan
தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ. நம்ம ஊரில் ஆறாவது சீசனை நெருங்கிவிட்டது பிக் பாஸ். அனைத்து மொழிகளிலும் அங்குள்ள பிரபலங்களை வைத்து தொகுத்து வழங்கி வருகிறது. அதன்படி நம்ம ஊரில் கமலஹாசன் போல ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் பிக் பாஸ் ஷோ குறித்த சமீப காலமாக அதிக ரூமர் கிளம்பி வருகிறது. அதன்படி சல்மான்கானுக்கு ரூபாய் ஆயிரம் கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. தற்போது இந்தியில் 15 சீசன் முடிவடைந்து தற்போது பதினாறு சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற விஜய்...பேன்ஸை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது...
salman khan
இந்நிலையில் பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க சல்மான்கான் 1000 கோடி சம்பளம் கேட்டதாக ஒரு செய்தி பரவியது. ஒவ்வொரு சீசனிலும் அவரது சம்பளம் அதிகரித்ததாகவும் கடந்த சீசனில் ரூபாய் 350 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக சல்மான்கான் முடிவு எடுத்ததால் ஆயிரம் கோடி சம்பளம் கொடுக்க பிக் பாஸ் நிறுவனம் தடாலடி முடிவை எடுத்துள்ளதாக ஒரு கருத்து பரவியது.
மேலும் செய்திகளுக்கு...25 ஆண்டுகளில் இரண்டே பிளக்பாஸ்டர் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராய்..அதுவும் இவர் காரணம் இல்லையாம்!
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த சல்மான்..ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் நான் வேலைக்கே போக மாட்டேன் என கூறியுள்ளார். 56 வயதான நடிகர் தான் சட்டத்தின் கீழ் செயல்படுவதாகவும் இவ்வளவு சம்பாதிக்கும் போது தனது வழக்கறிகளுக்கு பணம் செலுத்த அதிக தொகை தேவைப்பட்டதாகவும், ஒருவேளை நான் அந்த சம்பளத்தை பெற்றால் டாக்ஸ் கட்ட வேண்டி இருக்கும் எனது வழக்கறிஞர்களுக்கும் கொடுக்க வேண்டி இருக்கும் என அந்த வதந்தியை மறுத்துள்ளார்.