சல்மான் கான் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர்..! முன்னாள் காதலியின் பகீர் குற்றச்சாட்டு!
நடிகர் சல்மான் கான், பெண்களை அடித்து கொடுமை படுத்தும் ஒரு சாடிஸ்ட் என பிரபல பாகிஸ்தான் நடிகையும், சல்மான் கானின் முன்னாள் காதலியுமான சோமி அலி சமூக வலைதளத்தில் கூறியிருப்பது பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் சர்ச்சைக்குரிய பிரபலமாகவும், முன்னணி நடிகராகவும் உள்ளவர் சல்மான் கான். இருப்பினும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டு தான் உள்ளது. இவரது ரசிகர்கள் எப்போதுமே அவரை, விட்டுக் கொடுத்ததே... இல்லை. அதை போல் சல்மான் கானும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
56 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ள சல்மான் கான், இதுவரை அவருடன் நடித்த பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர். குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், சினேகா உல்லால், சோமி அலி, என இவரது காதலில் சிக்கி கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
மேலும் செய்திகள்: ஹீரோயினாக அறிமுகமாகிறாரா..? நடிகை ரோஜாவின் மகள்..! சீக்ரட்டாக நடக்கும் வேலைகள்!
இந்த லிஸ்டில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் கத்ரீனா கைப்பை அடுத்து அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் பாகிஸ்தான் நடிகையான சோமி அலி தான். 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இருவரும் சுமார் 8 வருடம் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது, கருத்து வேறுபாடு மற்றும் சல்மான் கானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சோமி அலி அவரை விட்டு பிரிந்தார்.
இவ்ரகள் இருவரும் பிரிந்த பின்னர் சோமி அலி, பாலிவுட் திரையுலகை விட்டே மொத்தமாக ஒதுங்கி... பாகிஸ்தானுக்கு பறந்தார். இவர்கள் இருவரும் பிரிந்து 20 வருடங்கள் ஆன போதிலும், அவ்வப்போது சில பேட்டிகளில் சல்மான் கானை விமர்சித்து பேசியுள்ளார். அந்த வகையில் தான் தற்போது இவர் சல்மான் கான் பெயரை குறிப்பிடாமல்... அவர் நடித்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: தனுஷ் பட நாயகி சோனம் கபூருக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்துக்கள்..!
இதுகுறித்து தன்னுடைய பதிவில் அவர் கூறியுள்ளதாவது, " தயவுசெய்து அவரை கொண்டாடுவதை நிறுத்துங்கள். அவர் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர். ஒரு சாடிஸ்ட் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த அதிரடி குற்றச்சாட்டு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் கிளாமர் டாலாக மாறிய திவ்ய பாரதி! அடங்காத கவர்ச்சி அட்ராசிட்டி!