- Home
- Cinema
- தியேட்டர் தராததால் ஆத்திரம்... சல்லியர்கள் படத்தை ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸ் செய்தார் சுரேஷ் காமாட்சி
தியேட்டர் தராததால் ஆத்திரம்... சல்லியர்கள் படத்தை ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸ் செய்தார் சுரேஷ் காமாட்சி
கிட்டு இயக்கத்தில் கருணாஸ் நடித்த சல்லியர்கள் திரைப்படம் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் இன்று நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Salliyargal Movie Direct OTT Release
கிட்டு இயக்கத்தில் ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சல்லியர்கள். கருணாஸ் நடித்துள்ள இப்படம் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படாத காரணத்தால் இப்படத்தின் வெளியீடு தடைபட்டது. இப்படத்திற்கு வெறும் 27 தியேட்டர்களே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இன்று இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி ஆதங்கம்
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது : “எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி 1 அன்று வெளியிட இருந்தோம். ஆனால், வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. தமிழ் மக்கள் சார்ந்து ஈழப் போராட்டம் சார்ந்து எடுத்துள்ள எம் மக்களுக்கான படத்தை இங்கே வெளியிட இவ்வளவு போராட்டம். குறிப்பாக பிவிஆர் திரையரங்கம் ஒரு திரையரங்குகூடத் தரவில்லை.
எந்த தளத்தில் ரிலீஸ்
எங்கிருந்தோ வந்து எம் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு எம்மையே புறக்கணிக்கும் செயலைச் செய்ய முடிவதெப்படி? பெரிய படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு நவீன தீண்டாமைதான். இன்று சுரேஷ் காமாட்சிக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். சல்லியர்கள் படம் OTT PLUS என்கிற தளத்தில் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சேரன் ஆதரவு
சல்லியர்கள் படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படம் குறித்து இயக்குநர் சேரன் போட்டுள்ள பதிவில், “OTT Plus என்ற தளத்தில் "சல்லியர்கள்".. தம்பி கிட்டு இயக்கத்தில் ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவிய படைப்பு. திரையரங்கங்கள் சரியாக கிடைக்காததால் ஓடிடியில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு நாம் தரும் ஆதரவே இன்னும் நல்ல படங்கள் உருவாக வழிவகுக்கும்” என பதிவிட்டுள்ளார். இப்படம் ஏராளமானோர் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், #சல்லியர்கள் என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

