பறிபோகும் சைஃப் அலிகானின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள்; அரண்மனை உள்பட எல்லாம் காலி!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு சொந்தமான 15 ஆயிரம் கோடி சொத்துக்களை மத்திய அரசு கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Saif Ali Khan
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவர் நடிகர் என்பதை தாண்டி, பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. போபாலை சேர்ந்த நவாப் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான். அவருக்கும் நடிகை ஷர்மிளா தாக்கூருக்கும் மகனாக பிறந்தவர் தான் சைஃப் அலிகான். பட்டோடி அரச குடும்பத்துக்கு சொந்தமாக போபாலில் அரண்மனை உள்பட 15 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.
Pataudi Palace
பட்டோடி பரம்பரை
பட்டோடி குடும்பத்தின் பரம்பரை பற்றி சுருக்கமாக பார்க்கலாம். போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான் தான். இவருக்கு மொத்தம் மூன்று மகள்கள். இதில் மூத்த மகள் அபிதா, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் செட்டில் ஆனதால் அவரது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இரண்டாவது மகள் சஜிதா சுல்தான், இந்திய கிரிக்கெட் வீரர் இப்திகார் அலியை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகன் வழிப் பேரன் தான் நடிகர் சைஃப் அலிகான்.
Saif Ali Khan Properties
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களின் சொத்துக்கள் எதிரி சொத்துக்களாக கருதப்பட்டு அது மத்திய அரசால் கையகப்படுத்தப்படும். இதன் அடிப்படையில் அபிதா பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததை காரணம் காட்டி போபால் அரச குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்து, அதில் சஜிதாவின் சொத்துக்களையும் கொண்டு வர முயன்றுள்ளது.
இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்!
Saif Ali Khan Royal Family
இதை எதிர்த்து நடிகர் சைஃப் அலிகான் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்றும் மத்திய அரசு கையகப்படுத்த தடைவிதித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஏனெனில் 2016-ம் ஆண்டு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் போபால் அரச குடும்பத்து சொத்துக்களில் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என அறிவித்திருந்தது.
Saif Ali Khan Pataudi Palace
ஆனால் தற்போது மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் போபால் அரச குடும்பத்து சொத்துக்களுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. தடையை நீக்கியதோடு, சைஃப் அலிகான் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் கொடுக்கப்பட்ட 30 நாட்களுக்குள் சைஃப் அலிகான் மேல்முறையீடு செய்யவில்லை.
Saif Ali Khan may lose Pataudi Palace
இதன் காரணமாக சைஃப் அலிகானின் 15 ஆயிரம் கோடி சொத்துக்களை அரசு கையகப்படுத்த வாய்ப்புள்ளது. அண்மையில் திருடனால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலிகான், அதில் இருந்து மீண்டு வருவதற்குள் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழக்க உள்ள தகவல் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கும்.
இதையும் படியுங்கள்... சைஃப் அலிகானை தாக்கிவிட்டு செல்போன் கடைக்குச் சென்ற குற்றவாளி! புதிய சிசிடிவி காட்சி வெளியீடு!