- Home
- Cinema
- பழைய ஹீரோயின் வந்ததுவும் புதுசா வந்த நடிகையை கழட்டி விட்ட விஜய் டிவி? முக்கிய சீரியலில் திடீர் மாற்றம்!
பழைய ஹீரோயின் வந்ததுவும் புதுசா வந்த நடிகையை கழட்டி விட்ட விஜய் டிவி? முக்கிய சீரியலில் திடீர் மாற்றம்!
சீரியலிலிருந்து பாதியிலேயே சென்ற நடிகை சாய் காயத்ரி மீண்டும் அதே ரோலில் நடிக்க வந்ததால், புதிய ஹீரோயினை சீரியல் குழு நீக்கி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையை சேர்ந்த சீரியல் நடிகை சாய் காயத்ரி
மதுரையைச் சேர்ந்தவர் நடிகை சாய் காயத்ரி. கனா காணும் காலங்கள்: கல்லூரியின் கதை தொடர் மூலமாக அறிமுகமானவர். பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். குரங்கு கைல பூமாலை என்ற படத்திலும் நடித்துள்ளார். பொதுவாகவே விஜய் டிவியில் யார் அறிமுகமானாலும் எளிதில் பிரபலமாகிவிடுவார்கள். அப்படி நடிக்க வந்து குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் தான் நடிகை சாய் காயத்ரி.
சாய் காயத்ரி - ஆகாஷ் ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது
இவர் 'நீ நான் காதல்' என்ற சீரியலில் ஆகாஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் (சங்கரேஷ் குமாருக்கு) ஜோடியாக அனு என்ற ரோலில் நடித்து வந்தார். இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டது. அதன் பிறகு உடல்நிலை சரியில்லை என கூறி அதிரடியாக கடந்த ஆண்டு இந்த சீரியலில் இருந்து சாய் காயத்ரி விலகினார்.
விஜய் டிவி ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!
மீண்டும் நீ நான் காதல் சீரியலில் சாய் காயத்ரி
எனவே இவருக்கு பதிலாக அணு கதாபாத்திரத்தில், 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் நடித்த நடிகர் அஷ்ரிதா ஸ்ரீதாஸ் கமிட் ஆனார். இவர் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது மட்டும் இன்றி, பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் சாய் காயத்திரி நடித்த அனு கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
விஜய் டிவி தொடரில் இருந்து வெளியேறிய அர்ஷிதா:
தற்போது மீண்டும் சாய் காயத்ரி, 'நீ நான் காதல்' சீரியலில் நடிக்க வந்துள்ள நிலையில், அதிரடியாக அர்ஷிதா விலகி உள்ளதாக கூறப்படுகிறது. பழைய ஹீரோயின் வந்துவிட்டதால், அர்ஷிதாவை சீரியல் குழு அதிரடியாக நீக்கி விட்டதா என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த கேரக்டர் சரி இல்ல - எனக்கு வேண்டாம் - பாண்டியன் ஸ்டோரில் இருந்து விலகும் நடிகை! யார் அவர்!