சூர்யா, அல்லு அர்ஜுனை தொடர்ந்து சிம்பு பட வாய்ப்பை தட்டிதூக்கிய சாய் அபயங்கர்!
தமிழ் சினிமாவில் மியூசிக் சென்சேஷனாக உருவெடுத்துள்ள சாய் அபயங்கர், தற்போது சிம்பு படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Simbu Next Movie Music Director sai abhyankkar : அனிருத்தை தொடர்ந்து கோலிவுட்டில் ஒரு மியூசிக் சென்சேஷனாக உருவெடுத்துள்ளார் சாய் அபயங்கர். இவருக்கு தற்போது 20 வயது தான் ஆகிறது. பாடகர்கள் திப்பு - ஹரிணி ஜோடியின் மகனான இவர், சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்ததால், தற்போது இசையமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். இதுவரை இவர் இசையமைத்து வெளிவந்த கட்சி சேர மற்றும் ஆச கூட ஆகிய சுயதீன இசைப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.
Sai abhyankkar
சாய் அபயங்கரின் அறிமுக படம்
ஆல்பம் பாடல்களை ஹிட் கொடுத்த சாய் அபயங்கரை சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது லோகேஷ் கனகராஜ் தான். அவர் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார் சாய் அபயங்கர். இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் சாய் அபயங்கருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 படத்திற்கும் சாய் தான் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சாதனைகளை முறியடித்த சாய் அபயங்கர்!
Music Director Sai Abhyankkar
சாய் அபயங்கருக்கு குவியும் பிரம்மாண்ட பட வாய்ப்பு
இதுதவிர பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் நான்காவது திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசை. அப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இதையடுத்து அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்திற்கும் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார் சாய் அபயங்கர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் சுமார் 800 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இதற்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
Sai Abhyankkar Roped in for STR 49
சிம்பு படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
இப்படி பிரம்மாண்ட வாய்ப்புகளை தட்டிதூக்கி வரும் சாய் அபயங்கருக்கும் அடுத்ததாக மற்றுமொரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுதான் சிம்புவின் எஸ்.டி.ஆர்.49 திரைப்படம். அப்படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தான் எஸ்.டி.ஆர்.49 திரைப்படத்தை தயாரிக்கிறார். அப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகி உள்ளதை தமிழ் புத்தாண்டு தினமான இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... மியூசிக் சென்சேஷனாக உருவெடுத்த சாய் அபயங்கர் - கைவசம் இத்தனை படங்களா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.