ஏமாந்து போன வலிமை தயாரிப்பாளர்...என்ன நடந்தது தெரியுமா?
தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டைப் உபயோகித்து சுமார் ரூ.4 லட்சம் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

boney kapoor
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக உள்ளார். தென் இந்திய மொழிகள் பலவற்றில் கால்பதித்துள்ள இவர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் பாலிவுட் நாயகிகளாக அறிமுகமாகி விட்டனர்.
boney kapoor
இவர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிய நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் காலா பட நாயகி ஹீமா குரேஷியும், அஜித்தும் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து அஜித் 61 படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
boney kapoor
இந்நிலையில் போனிகபூரின் வாங்கி கணக்கில் இருந்து பணம் மயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் தனது கணக்கில் இருந்து கடந்த பிப்ரவரி 9 அன்று கபூரின் கணக்கிலிருந்து 5 முறை ரூ.3.82 லட்சம் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து யாரும் தனக்கு கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்கவில்லை, தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை என தயாரிப்பாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
boney kapoor
புகாரை தொடர்ந்து சைபர் கிரைம் உதவியுடன் மும்பையிலுள்ள அம்போலி போலீஸ் நிலையத்தில் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கபூரின் கார்டிலிருந்து குருகிராமிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் மாற்றப்படுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே காவல்துறையினரின் விசாரணை வாயிலாக குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.