- Home
- Cinema
- முடிவுக்கு வருகிறது RRR படத்தின் வசூல் வேட்டை... ரூ.1000 கோடி வசூலித்தும் ‘பாகுபலி 2’ சாதனையை பீட் பண்ண முடியல
முடிவுக்கு வருகிறது RRR படத்தின் வசூல் வேட்டை... ரூ.1000 கோடி வசூலித்தும் ‘பாகுபலி 2’ சாதனையை பீட் பண்ண முடியல
RRR : ரூ.1000 கோடி வசூலை RRR படம் எளிதில் கடந்த போதும், இது பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் உலகமெங்கிலும் பிரபலமானார் இயக்குனர் ராஜமவுலி. இதையடுத்து அவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் உலகெங்கிலும் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இந்திய சினிமாவில் அதிக தொகை வசூலித்த படமாக சாதனை படைத்தது. இப்படம் மொத்தமாக ரூ.1,800 கோடி வசூலித்தது.
இதையடுத்து ராஜமவுலி இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இப்படம் பாகுபலி அளவுக்கு இல்லை என விமர்சனங்களை சந்தித்தாலும், தன் பிரம்மாண்ட காட்சியமைப்பால் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வெளியானது முதல் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ரூ.1000 கோடி வசூலை இப்படம் எளிதில் கடந்த போதும், இது பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இன்னும் 3 நாட்களில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஓட்டம் முடிவுக்கு வர உள்ளது. ஏனெனில், வருகிற ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் விஜய்யின் பீஸ்ட், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 போன்ற பிரம்மாண்ட படங்கள் ரிலீசாக உள்ளன. அதனால் எஞ்சியுள்ள 3 நாட்களில் இப்படம் 800 கோடி ரூபாய் வசூலிப்பது என்பது முடியாத காரியம். அதனால் ‘பாகுபலி 2’ சாதனையை ஆர்.ஆர்.ஆர் படத்தால் பீட் பண்ண முடியாது என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Andrea : அம்மன் கோவில் திருவிழாவில் ஆட்டம் போட மறுத்த ஆண்ட்ரியா... ரசிகர்கள் ரகளையால் பரபரப்பு