Andrea : பிசியான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, அண்மையில், சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி கோவில் திருவிழாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், வெற்றிமாறனின் வட சென்னை, இயக்குனர் ராமின் தரமணி என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டவர் ஆண்ட்ரியா. நடிப்பைப் போல் திரையுலகில் பாடகியாகவும் ஜொலித்து வரும் இவர், அண்மையில் புஷ்பா படத்திற்காக பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட் ஆனது.
தற்போது நடிகை ஆண்ட்ரியா கைவசம் பிசாசு 2 திரைப்படம் உள்ளது. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பேயாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுதவிர நோ எண்ட்ரி, க் போன்ற படங்களிலும் நடித்தும் முடித்துள்ளார் ஆண்ட்ரியா. இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, அண்மையில், சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி கோவில் திருவிழாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்ததால், போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
பின்னர் மேடைக்கு வந்த ஆண்ட்ரியா, புஷ்பா படத்தில் இடம்பெறும் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலை பாடினார். இதற்கு ஆரவாரம் செய்த ரசிகர்கள், நடிகை ஆண்ட்ரியா நடனம் ஆட வேண்டும் என கூச்சலிட்டனர். இதனால் கோபமான அவரை சக திரைப்படத் துறையினர் சமாதானம் செய்தனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்து ஆண்ட்ரியே சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்... Beast movie : புரமோஷனுக்கு வர மறுத்த விஜய்... கோபத்தில் ரசிகர்கள் - பிற மொழிகளில் பிக் அப் ஆகுமா பீஸ்ட்?

