- Home
- Cinema
- அடேங்கப்பா..ஒரே வாரத்தில் இவ்வளவு கோடி வசூலா?.. 3 டிஜிட் கோடிகளை தொடர்ந்து குவிக்கும் ராஜமௌலி ஹிட்
அடேங்கப்பா..ஒரே வாரத்தில் இவ்வளவு கோடி வசூலா?.. 3 டிஜிட் கோடிகளை தொடர்ந்து குவிக்கும் ராஜமௌலி ஹிட்
மொத்த திரியரங்கையும் கட்டி ஆளும் ஆர் ஆர் ஆர் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

RRR Movie
பாகுபலி இயக்குனரின் நெக்ஸ்ட் ஹிட் :
பாகுபலி படத்தின் மூலம் உலகறிந்த இயக்குனர் ராஜமௌலி. இவரின் அடுத்த பிரமாண்டமான ஆர்ஆர் ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் நடிப்பில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
RRR Movie
நட்சத்திர கொண்டாட்டம் :
ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது
RRR Movie
மிதமிஞ்சிய அனிமேஷன் :
தெலுங்கு படம் என்றாலே கொஞ்சம் ஓவர் டோஸ் இருக்கத்தான் செய்யும் என்பது ரசிகர்களின் கருத்து. அதிலும் காவிய திரைப்படங்களில் அனிமேஷனுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் ஆர் ஆர் ஆர் படத்தில் புலியை ஹீரோ ஒரே ஆளாக நிறுத்துவது. பைக்கை தூக்கி அடிப்பது, மிருகங்களோடு பறப்பது என திகட்டும் அனிமேஷன் இருப்பதாகவே விமர்சனங்கள் எழுகின்றன.
అయితే ఈ సినిమా విషయంలో ఎన్టీఆర్, రామ్చరణ్ అసంతృప్తితో ఉన్నారనేది సోషల్ మీడియా టాక్. విడుదలయ్యాక ఎన్టీఆర్, చరణ్ ట్వీట్లు పెట్టారు. అవి ఏదో మొక్కుబడిగా పెట్టినట్టుంది గానీ, రాజమౌళిపై ప్రశంసలు కురిపించడంగానీ, సినిమా ఆహో, ఓహో అని చెప్పడంగానీ లేదు. జస్ట్ ఆదరిస్తున్న ఆడియెన్స్ కి ధన్యవాదాలు తెలిపారు ఎన్టీఆర్. చరణ్ సైతం రాజమౌళి సినిమా అంటూ వారి అసంతృప్తిని పరోక్షంగా వెల్లడించినట్టుగా ఉందని క్రిటిక్స్ నుంచి వినిపిస్తున్న టాక్.
RRR MOVIE
இருந்தும் ரசிகர்களை ஈர்த்த ஆர் ஆர் ஆர் :
அனிமேஷன், பஞ்சுகள் என பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த படம் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கீரவாணியின் தெறிக்கவிடும் பிஜிஎம் அனிமேஷனை அடக்கி விடுகிறது. படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. அடுத்தடுத்து ரூ.340 கோடிரூ. 500 கோடி என மாஸ் காட்டி வருகிறது.
RRR MOVIE
படத்தின் ப்ரோமோஷன் :
படம் வெளியாவதற்கு முன்பு பிரமாண்டமாக துவங்கிய ப்ரோமோஷன் விழாவில் ராஜமௌலி, ராம்சரண், என்டிஆர் கலந்து கொண்டு படம் ரிலீஸுக்கு முன்னரே பேமஸாகி இருந்தனர். இவர்களது கலகலப்பான பேச்சுக்கள் இன்று வரை இணையத்தில் உலா வருகிறது.
RRR MOVIE
உலகளவில் நம்பர் 1 :
இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது. உலக அளவில் 21 பிரதேசங்களில் மட்டுமே வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் 6.32 மில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்து, கடந்த வார இறுதியில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை பெற்றது.
RRR MOVIE
ஒரு வார வசூல் :
படம் வெளியான ஒரே வாரத்தில் இதுவரை உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 25-ம் தேதி வெளியான இந்த படம் 7 நாட்களில் ரூ.710 கோடியை குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.