Roja | தன் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரோஜா!!
நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Actress Roja birthday celebration photos
தனது 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடிகையும் எம் எல் ஏவுமான ரோஜா தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
Actress Roja birthday celebration photos
“செம்பருத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரோஜா ஆந்திர மாநிலத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி பிறந்தார்.
Actress Roja birthday celebration photos
2002 வரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பிசியான நடிகையாக இருந்த இவர் தொடர்ந்து அரசியலிலும் தீவிரம் காட்டிவந்தார்.
Actress Roja birthday celebration photos
கடந்த 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் தெலுங்கு மகிளா மன்றத்தின் தலைவராகவும் இருந்துவந்தார்.
Actress Roja birthday celebration photos
ரோஜா அறிமுகமான செம்பருத்தி படத்தை இயக்கிய செல்வமணியை கடந்த 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணா லோகித், அன்ஷு மாலிகா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
Actress Roja birthday celebration photos
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை ரோஜா 2014, 2019 என இரண்டு முறை நகரி தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றிப்பெற்றுள்ளார்.
Actress Roja birthday celebration photos
கடந்த 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் தெலுங்கு மகிளா மன்றத்தின் தலைவராகவும் இருந்துவந்தார். அந்தக் கட்சியின் சார்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
Actress Roja birthday celebration photos
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக உருவெடுத்துவரும் நடிகை ரோஜா தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.