MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குழந்தையோடு தான் ஷாரிக்கை திருமணம் செய்தேன்! கண்ணீரோடு ரியாஸ் கான் மருமகள் கூறிய பகீர் தகவல்!

குழந்தையோடு தான் ஷாரிக்கை திருமணம் செய்தேன்! கண்ணீரோடு ரியாஸ் கான் மருமகள் கூறிய பகீர் தகவல்!

நட்சத்திர தம்பதிகளான உமா - ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன் தன்னுடைய மனைவி மரியாவோடு முதல் முறையாக கொடுத்துள்ள பேட்டி, தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

3 Min read
Author : manimegalai a
Published : Oct 24 2024, 06:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shariq Hassan Family

Shariq Hassan Family

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், குணச்சித்திர நடிகையாக மாறியவர் உமா. இவர் பிரபல இசையமைப்பாளர் காமேஷ் மற்றும் நடிகை கமலா காமேஷின் மகள் ஆவார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தையாக நடித்த இவர், பின்னர் 'அன்பே சிவம்' படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கனவு மெய்ப்பட வேண்டும், மௌனகுரு, அம்புலி, மரியான், பிரியாணி, பூங்காவனம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் சிவசங்கரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Shariq Hassan and Mariya Jenifer Wedding

Shariq Hassan and Mariya Jenifer Wedding

இளம் வயதிலேயே, பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் என்கிற மகனும், சமர்த் ஹாசன் என்கிற மகனும் உள்ளனர்.
ஷாரிக் பென்சில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், திரைப்பட வாய்ப்புக்காக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

பின்னர் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் நடனமாடி, டைட்டில் பட்டதை வென்றார். தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஷாரிக் மரியா ஜெனிஃபர்  என்பவரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

ரேவதியா இது? முடியெல்லாம் நரைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

35
Riyaz Khan Son Shariq Hassan

Riyaz Khan Son Shariq Hassan

இவர்களின் திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல் இரு வீட்டு குடும்பத்தினரும் கலந்து கொண்டு இவர்களின் திருமணத்தை சிறப்பித்தனர். ஷாரிக் காதலித்த மரியா ஜெனிஃபர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடந்தது.

மரியாவை, ஷாரிக் காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் அனைவருக்கும் தெரியும் என்றாலும், மரியா ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு பத்து வயதில் மகள் ஒருவர் இருக்கிறார் என்ற தகவல் யாரும் அறியாத விஷயமே.இதை தற்போது ரெட் நூல் youtube சேனலில் வெளிப்படையாக மரியா கூறியுள்ளார்.

45
Shariq Hassan Have a 10 years Daughter

Shariq Hassan Have a 10 years Daughter

இந்த பேட்டியில் பேசியுள்ள மரியா, "ஒரு சிங்கிள் மதராக தான் தன்னுடைய மகளை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன். எனவே தன்னுடைய மகளை தவிர, வேறு எதுவும் எனக்கு முக்கியமானதாக தெரியவில்லை. குறிப்பாக இரண்டாம் திருமணம் குறித்து எப்போதுமே நான் யோசித்ததே இல்லை. காரணம் என்னை ஏற்றுக் கொள்பவர்கள், என்னுடைய மகளை ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகமே.

ஆனால் ஷாரிக் என் மகளையும் நன்றாக பார்த்துக் கொண்டார். இதுதான் அவர் மீது எனக்கு காதல் வர காரணமாக அமைந்தது. இருந்தாலும் அவரின் பெற்றோர் குழந்தையோடு என்னை ஏற்றுக் கொள்வார்களா? என்கிற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் ஐராவை என்னுடைய ஆன்ட்டி - அங்கிள் அவர்களின் பேத்தியாகவே பார்க்க துவங்கி விட்டனர். அங்கிள் - ஆண்ட்டி ஷாப்பிங் போனால் அவளையும் கூட அழைத்து தான் செல்வார்கள். ஷூட்டிங்கில் இருந்தால் கூட ஐரா ஸ்கூலுக்கு போயிட்டாளா? வந்துட்டாளா என்று அங்கிள் அக்கறையாக விசாரிப்பார்.

ரேவதியா இது? முடியெல்லாம் நரைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

55
Mariya Jenifer told Daughter Ira

Mariya Jenifer told Daughter Ira

ஷாரிக் என்னிடம், இத்தனை வருஷம் ஐராவை நீ பார்த்துக் கொண்டது போதும். இனி அவளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறினார். அப்போதுதான் எனக்கு முழு நம்பிக்கை வந்தது. 

ஷாரிக் கூறுகையில், அப்பா - அம்மாவிடம் மரியா மற்றும் ஐராவை பற்றி சொல்வதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், ஒருவழியாக கூறிவிட்டேன். அம்மா - அப்பா இருவருக்கும் மரியா மற்றும் ஐராவை மிகவும் பிடித்து விட்டது. பின்னர் திருமணத்திற்கும் சம்மதம் கூறிவிட்டார்கள். ஊர் ஆயிரம் சொல்லும் அதையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், எனக்கு என் மகளும், என் பொண்டாட்டியும் மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏற்கனவே? மரியாவுக்கு திருமணம் ஆன  தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பழைய சீரியல்களுக்கு முடிவு கட்டிட்டு.. 3 புதிய தொடர்களை களமிறக்கும் சன் டிவி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
விஜய் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved