MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படத்திற்கு வந்த புது சிக்கல்: மக்கள் எதிர்பால் பரபரப்பு!

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படத்திற்கு வந்த புது சிக்கல்: மக்கள் எதிர்பால் பரபரப்பு!

ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் காந்தாரா சேப்டர் 1 படமானது சுற்றுச்சூழல் விதிமீறல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. படப்பிடிப்பிற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 21 2025, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kantara Movie

Kantara Movie

தேசிய விருது பெற்ற ரிஷப் ஷெட்டி, காந்தார ப்ரீக்வெல் படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கிறார். ராஜ வம்சப் பின்னணியில் உருவாகும் இப்படம், மிகவும் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுகுறித்த தகவலை பார்ப்போம்.
 

25
Kantara Prequel

Kantara Prequel

கடந்த 2022-ஆம் ஆண்டு பான்-இந்தியா திரைப்படமாக நாடு முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. இயக்குனரும் - நடிகருமான ரிஷப் ஷெட்டி, தனது கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த படத்தை இயக்கி - முடித்திருந்தார். இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும், 'காந்தாரா' மூலம் இதுவரை படமாக்கப்படாத, பழங்குடி மக்களின் கலாச்சாரம், மற்றும் அவர்கள் வணங்கும் தெய்வம் பற்றி  காட்சிப்படுத்த பட்டிருந்தது. இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

போதையில் பேசிட்டேன் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!
 

35
Rishab Shetty Won National award

Rishab Shetty Won National award

'காந்தாரா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ரிஷப் ஷெட்டி நடிப்பில் இப்போது காந்தாரா சேப்டர் 1 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் கவிபெட்டா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெடிவித்து வருகின்றனர். அதாவது அனுமதியின்றி வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்துவதோடு வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
 

45
Rishab Shetty movie

Rishab Shetty movie

இது குறித்து உள்ளூர் சமூக அமைப்புகள், மற்றும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் விதிமீறல்கள் செய்வதாக கூறி காந்தாரா சேப்டர் 1 படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே வாரத்தில் நடந்த பிரேக்கப் - பெற்றோரை அழைத்து வந்த ஆல்யா மானசா - சஞ்சீவ் கூறிய ஷாக் தகவல்!
 

55
Kantara Chapter 1 Shoot Will Be Banned

Kantara Chapter 1 Shoot Will Be Banned

வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்தப் படம் கடம்ப வசம்சத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. காந்தாராவிற்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான வரலாற்றை இந்தப் படம் விளக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaai Kizhavi Day 4 Box Office : தாய் கிழவி படைத்த வசூல் சாதனை... 4 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?
Recommended image2
OTTக்கு வரும் வித் லவ் படம்... வாரிசுருட்டிய லைஃப்டைம் வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
ஆட்டம், பாட்டத்துடன் அடிபொலி கொண்டாட்டம்... வைரலாகும் Virosh ஜோடியின் சங்கீத் போட்டோஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved