போதையில் பேசிட்டேன் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!
Vinayakan has apologized after his controversial Video : மலையாள நடிகர் விநாயகன் குடி போதையில் ஆபாசமாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
Vinayakan has apologized after his controversial Video
Vinayakan has apologized after his controversial Video : மலையாளத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விநாயகன். தமிழ் சினிமாவில் விஷாலின் திமிரு, சிம்புவின் சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், சிறுத்தை, மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் இதுவரையில் வெளியாகவில்லை. எப்படி சினிமாவில் பிரபலமான நடிகரோ அதே அளவிற்கு சர்ச்சைக்கும் பிரபலம்.
Vinayakan Controversial Video
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் உடன் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் ஃபால்கனியில் குடி போதையில் ஆபாசமாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நிலையும் இது குறித்து மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Vinayakan Video
இது குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தான் வெளியிட்ட அந்த வீடியோவில் சினிமா நடிகர் என்ற முறையிலும், தனிநபர் என்ற முறையிலும் பல விஷயங்களை என்னால கையாள முடியவில்லை. அது குறித்தும் எனக்கு தெரியவில்லை. என்னுடைய செயலால் ஏற்பட்ட அனைத்து எதிர்மறையான சம்பவங்களுக்கும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். விவாதங்கள் தொடரட்டும் என்று கூறியிருக்கிறார்.
Vinayakan Drunken Video
விநாயகனின் இந்த வீடியோ தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்று கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், விநாயகனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முன்னதாக விநாயகன் பொதுவெளியில் இப்படி ஆபாசமாக பேசுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் பல முறை இப்படியெல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.