- Home
- Cinema
- இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... அட்லீ இயக்கத்தில் அஜித்? இணையத்தை தெறிக்கவிடும் ஏகே 63 அப்டேட்ஸ்
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... அட்லீ இயக்கத்தில் அஜித்? இணையத்தை தெறிக்கவிடும் ஏகே 63 அப்டேட்ஸ்
துணிவு படத்தின் வெற்றிக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வரும் அஜித் அடுத்ததாக ஏகே 63 படத்துக்காக அட்லீ உடன் இணைய உள்ளாராம்.

துணிவு படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் உள்ள அஜித், அதே உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்காலிகமாக ஏகே 62 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஏகே 62 படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் சில வாரங்கள் இருப்பதால், தற்போது ஜாலியாக லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் அஜித். அங்கு சில நாட்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள அவர், இந்தியா திரும்பியதும் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தமிழில் தயாரிப்பாளராக களமிறங்கும் தோனி... முதல் படமே ‘லவ் டுடே’ பிரபலத்துடன் - வெளியானது மாஸ் அறிவிப்பு
இன்னும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கே தொடங்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது ஏகே 63, அதாவது அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளனர். அதன்படி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீ தான் அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் சிறுத்தை சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. இவ்வாறு 4 இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டாலும், அட்லீ இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.