வீட்ல ஒரு எம்எல்ஏ போதும்..! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து பகீர் கிளப்பிய ரேகா நாயர்
நடிகை ரேகா நாயர், திமுக எம்.எல்.ஏ ஒருவருடன் நெருங்கிப் பழகி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது ஓப்பனாகவே தாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதை போட்டுடைத்திருக்கிறார் ரேகா.

Actress Rekha Nair
சினிமாவில் நடித்து பேமஸ் ஆனதை விட, சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் ரேகா நாயர். இவர் இரவின் நிழல் படத்தின் ஆடையின்றி நடித்தது பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியதால், அவர்மீது கடுப்பான ரேகா, பீச்சில் வாக்கிங் சென்றபோது, பயில்வான் ரங்கநாதனை செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்துக்கு பின்னர் பல பேட்டிகளில் வெளிப்படையாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கவனம் பெற்றார்.
நடிகை ரேகா நாயர்
கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த ரேகா நாயர், படித்ததெல்லாம் கோவையில் தான். பின்னர் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த இவர், பெரியளவில் பட வாய்ப்பு கிடைக்காததால் நடிகையாக சோபிக்கவில்லை. இருப்பினும் தான் ஒரு ஹீரோயின் மெட்டீரியல் என்றும், 90ஸ் காலகட்டத்தில் நான் சினிமாவுக்கு வந்திருந்தால் நிச்சயம் ஹீரோயின் ஆக்கியிருப்பேன் என பாரதிராஜாவே தன்னிடம் சொன்னதாக ரேகா நாயர் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
தொலைந்து போன முதல் கணவர்
நடிகை ரேகா நாயருக்கு 19 வயதிலேயே திருமணம் ஆனது. அவருக்கு திருமணமான அடுத்த ஆண்டே பெண் குழந்தையும் பிறந்தது. ரேகா நாயரின் முதல் கணவர், திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்திருக்கிறார். அதன்பின்னர் தொலைந்துபோனாராம். அவர் தொலைந்து 18 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ரேகா நாயர் தமிழா தமிழா என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறி இருந்தார். இதையடுத்து நடிகை ரேகா நாயர் இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார்.
வீட்டிற்கு ஒரு எம்.எல்.ஏ போதும்
இரண்டாவது கணவர் யார் என்பது பற்றி வாய்திறக்காமல் இருந்த ரேகா நாயர், சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோது, அங்கிருந்த செய்தியாளர்கள், அவரிடம் உங்களுக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் நான் ஏன் அரசியலுக்கு வரணும் கேட்க, நீங்க வந்தா எம்.எல்.ஏ ஆகலாம்ல என செய்தியாளர் பதில் சொன்னதும், ஏற்கனவே வீட்ல ஒரு எம்.எல்.ஏ போதும் என ஸ்மார்ட் ஆக பதில் சொல்லிவிட்டு, இதைத்தானே எதிர்பார்த்தீங்க என சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினார்.
யார் அந்த எம்.எல்.ஏ?
நடிகை ரேகா நாயர் சொன்ன அந்த எம்.எல்.ஏ வேறுயாருமில்லை, பிரபாகர் ராஜா தான். விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரேகா நாயரை திருமணம் செய்துகொண்டதாக அரசல் புரசலாக செய்திகள் உலா வந்தன. இடையே இவர்கள் காதல் பற்றி பயில்வான் ரங்கநாதனும் கூறி இருந்தார்.
அதன்படி, பிரபாகர் ராஜாவின் தந்தை விக்ரமராஜா சொந்தமாக ஒரு ஜிம் வைத்திருக்கிறாராம். அதில் தினமும் உடற்பயிற்சி செய்ய பிரபாகர் ராஜா செல்வாராம். அங்கு நடிகை ரேகா நாயரும் உடற்பயிற்சி செய்ய வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாம். இதையடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரேகா நாயரை பிரபாகர் ராஜா தன்னுடைய இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டதாக பயில்வான் கூறினார்.
இதையடுத்து ரேகா நாயர் உடனே ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகள் பிரபாகர் ராஜா கலந்துகொண்டது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், நடிகை ரேகா நாயரே அதை முதன்முறையாக பொது வெளியில் கூறி இருக்கிறார்.