இவ்வளவு பெரிய நடிகராவார் என்று நான் எதிர்பார்க்கல: சிவகார்த்திகேயன் பற்றி பேசிய ரெஜினா!
Vidaamuyarchi Actress Regina Cassandra Talk About Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய நடிகராக வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று விடாமுயற்சி பட நடிகை ரெஜினா கஸாண்ட்ரா கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய நடிகராவார் என்று நான் எதிர்பார்க்கல: சிவகார்த்திகேயன் பற்றி பேசிய ரெஜினா!
Regina Cassandra Talk About Sivakarthikeyan's Cinema life : கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரெஜீனா கஸாண்ட்ரா. இதையடுத்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் எந்த படமும் பெரிதாக பேசப்படவில்லை. விஷால் நடித்து வெளியான சக்ரா படத்தில் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார். இந்தப் படம் கொடுத்த அமோக வரவேற்பு மற்றும் அவருடைய நடிப்பு காரணாமாக இப்போது அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் உடன் இணைந்து வில்லன் ரோலில் நடித்திருக்கிறார்.
விடாமுயற்சி ரெஜினா
இந்தப் படம் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், ஆரவ், அர்ஜூன், த்ரிஷா மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் பற்றி ரெஜினா பேசியது இப்போது வைரலாகி வருகிறது. பட புரோமோஷனுக்காக ரெஜினா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதில் அவரிடம் சிவகார்த்திகேயன் பற்றி கேள்வி எழுப்பபட்டிருக்கிறது. அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நானும் சிவகார்த்திகேயனும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்திருந்தோம். இந்தப் படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் அப்போது எப்படி இருந்தாரோ அதே போன்று தான் இப்பவும் இருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
கேடி பில்லா கில்லாடி ரங்கா ரெஜினா
அவருடன் நடிக்கும் போது அவர் இவ்வளவு பெரிய நடிகராக வருவார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான துறை தான் சினிமா துறை. அப்படியிருக்கும் போது அவர் இவ்வளவு பெரிய நடிகராக அவர் எப்படி பண்ணுனார், என்ன பண்ணார் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு நடிகராக அவர் வேறு மாதிரியாக இருக்கிறார். ஆனால், அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறார் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன்,வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று காமெடி ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயனை முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி காட்டியது அமரன் படம் தான். இந்தப் படத்தின் மூலமாக புதுவிதமான அவதாரம் எடுத்து இன்று சினிமாவின் உச்சநட்சத்திர நடிகர்களில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார்.
மகள் பிறந்த அதிர்ஷ்டம் – 3 மாசத்துல ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா!
சிவகார்த்திகேயனின் படங்கள்
அமரன் கொடுத்த வரவேற்பு மாஸான இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்போது கூட இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும், பெண் இயக்குநரான சுதா கொங்கராவின் பராசக்தி படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படங்களுக்கு பிறகு ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?