தமிழகம் முழுவதும் உதயநிதி குரல் தான் ..தியேட்டர்களை ஆக்கிரமித்த 'ரெட் ஜெயன்ட்'
தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட படங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.

udhayanidhi stalin
சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி ஆரம்பத்திலேயே அஜித், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்திருந்தார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவரின் முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஆன இவரின் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி வெற்றி கண்டது. இதையடுத்து மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இத்துடன் நடிப்பிற்கு முழுக்கு போடவுள்ளதாவும் கூறியுள்ளார்.
udhayanidhi stalin
திமுக ஆட்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தொடர்ந்து முக்கியமான திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த ஆண்டில் இதுவரையில், "எப்ஐஆர், எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம்" ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.
udhayanidhi stalin
தற்போது 'விக்ரம்' படம் தமிழகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'டான்' படம் 100 தியேட்டர்களிலும், 'நெஞ்சுக்கு நீதி' படம் 65 தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களில் பாதிக்கு மேல் இந்த இவரின் படம் தான் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் முக்கியமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது.