- Home
- Cinema
- ரஜினியின் ‘கூலி’க்கு பயந்து இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா?
ரஜினியின் ‘கூலி’க்கு பயந்து இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா?
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆவதால், இந்த வாரம் ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதன் தொகுப்பை பார்க்கலாம்.

Theatre and OTT Release Movies on August 08
தமிழ் சினிமாவில் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த வகையில் ஆகஸ்ட் இரண்டாவது வாரமும் அதே நிலை தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தான். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதனுடன் போட்டிபோட்டால் ஒரு தியேட்டர் கூட கிடைக்காது என்பதால், அப்படம் வெளியாகும் முன்னரே இந்த வாரம் அரை டஜன் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது மட்டுமின்றி ஆகஸ்ட் 8-ந் தேதி ஓடிடியிலும் சில படங்கள் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. அவற்றின் முழு பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
ஆகஸ்ட் 8-ந் தேதியான இன்று, விக்னேஷ், நாசர் நடித்த ரெட் ஃபிளவர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனுடன் காத்துவாக்குல ஒரு காதல், உழவர் மகன், மாமரம், நாளை நமதே, ராகு கேது, மகேஸ்வரன் மகிமை, வானரன், தங்கக் கோட்டை, நிஷா என இன்று மட்டும் மொத்தம் 10 தமிழ் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் பல படங்கள் புரமோஷனே இல்லாமல் வெளியாகி இருக்கின்றன. தெரிந்த முகங்கள் என்று பார்த்தால், சமுத்திரக்கனி ராகு கேது படத்தில் நடித்திருக்கிறார். மற்றபடி அனைத்துமே புதுமுகங்கள் நடித்த படங்கள் தான்.
ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள்
இந்த வாரம் ஓடிடியில் 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் ஒன்று, ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, விஜய் யேசுதாஸ், அஞ்சலி நடிப்பில் உருவான பறந்து போ. இப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதனுடன் சூரி நடித்த மாமன் படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. இதுதவிர நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது சகோதரர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமான ஓஹோ எந்தன் பேபி திரைப்படமும் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. மேலும் கலையரசன் நடித்த டிரெண்டிங் படம் சன் நெக்ஸ்டிலும், யாதும் அறியான் திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி உள்ளது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிற மொழி படங்கள்
தெலுங்கில் மாய சபா என்கிற வெப் தொடர் சோனி லிவ்வில் ஸ்ட்ரீம் ஆகிறது. இது தவிர Arabia Kadali மற்றும் Mothevari Love Story ஆகிய தெலுங்கு வெப் தொடர்களும் அமேசான் பிரைம் மற்றும் ஜீ5ல் ஸ்ட்ரீம் ஆகின்றன. Badmashulu என்கிற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்தியில் Salakaar படம் ஜியோ ஹாட்ஸ்டாரிலும், Red Letter படம் Shemaroo Me ஓடிடியிலும் ஸ்ட்ரீம் ஆகிறது. மலையாளத்தில் நடிகர் திரைப்படம் Saina Play ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அதேபோல் கன்னடத்தில் Hebbuli Cut படம் சன் நெக்ஸ்டிலும், Photo என்கிற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் ஸ்ட்ரீம் ஆகிறது. ஆங்கிலத்தில் Mickey17 ஹாட்ஸ்டாரிலும், The Pickup அமேசான் பிரைமிலும், Love Hurts ஹாட்ஸ்டாரிலும், Wednesday S2 வெப் தொடர் நெட்பிளிக்ஸிலும் ஸ்ட்ரீம் ஆகிறது.