MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சித்தார்த், ராஷி கண்ணா படத்திற்கு ரௌடி & கோ டைட்டில் வைக்க என்ன காரணம்?

சித்தார்த், ராஷி கண்ணா படத்திற்கு ரௌடி & கோ டைட்டில் வைக்க என்ன காரணம்?

Reason behind Rowdy and Co Movie Title : சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ரௌடி & கோ என்று டைட்டில் வைக்க என்ன காரணம் என்று இயக்குநர் விளக்கம் கொடுத்துள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Nov 14 2025, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சித்தார், ராஷி கண்ணா
Image Credit : Asianet News

சித்தார், ராஷி கண்ணா

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சித்தார்த். கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சித்தார்த்திற்கு பாய்ஸ் படம் ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, காவிய தலைவன், ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், அவள், 3பிஹெச்கே என்று பல படங்களில் நடித்துள்ளார்.

25
, ரௌடி & கோ, கார்த்திக் ஜி கிரிஷ்
Image Credit : Asianet News

, ரௌடி & கோ, கார்த்திக் ஜி கிரிஷ்

3BHK படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியன் 3 படத்தில் நடித்து வரும் சித்தார்த் அடுத்ததாக நடிகை ராஷி கண்ணா உடன் இணைந்து ரௌடி & கோ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ். இவர் இதற்கு முன்னதாக சித்தார்த்தின் டக்கர் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் பெரியளவில் ரீச்சாகவில்லை. இப்போது மீண்டும் கார்த்திக் ஜி கிரிஷ் உடன் இணைந்து சித்தார்த் ரௌடி & கோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

35
டக்கர், கார்த்திக் ஜி கிரிஷ்
Image Credit : Asianet News

டக்கர், கார்த்திக் ஜி கிரிஷ்

பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சுதன் சுந்தரம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

45
ராஷி கண்ணா, ரௌடி & கோ
Image Credit : Asianet News

ராஷி கண்ணா, ரௌடி & கோ

இந்தப் படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் கூறியிருப்பதாவது: ரௌடிகளின் சாம்ராஜ்ஜியம் தான் கார்ப்பரேட் என்று சொல்லும் கதை தான் இந்தப் படம். அதனால் படத்திற்கு ரௌடி & கோ என்று டைட்டில் வைத்தோம். இதுவே நல்ல டைட்டிலாகவும் அமைந்தது. இந்தப் படம் காமெடி காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

55
சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா
Image Credit : Asianet News

சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா

சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோருடன் இணைந்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சார்லஸ் வினோத் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வம்சி வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. பேன் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved