MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara : நயன் - விக்கி திருமணத்திற்கு திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? - வெளியான ஷாக்கிங் தகவல்

Nayanthara : நயன் - விக்கி திருமணத்திற்கு திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? - வெளியான ஷாக்கிங் தகவல்

Nayanthara Marriage : நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : May 30 2022, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.66 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இப்படத்தை இவர்கள் இருவரும் இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தனர். இப்படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள இந்த காதல் ஜோடி தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறது.

24

இவர்கள் இருவரும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். முதலில் இந்த ஜோடி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். இதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் இந்த திருமணத்தில் இருவீட்டார் தரப்பில் இருந்தும் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டதால் அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தர மறுத்திவிட்டார்களாம்.

34

திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது திருமணம் நடைபெறும் இடத்தை மாற்றி உள்ளனர். அதன்படி நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

44

இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்களாம். இதையடுத்து சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது நயன் - விக்கி ஜோடி, அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கதை பிடிக்கல... இவர் நடிச்சா யாரு பார்ப்பாங்கனு நினைச்சேன் - லெஜண்ட் சரவணன் குறித்து ஓப்பனாக பேசிய ஹாரிஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
திருப்பதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image2
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Recommended image3
உடைந்து போன பாக்கியலட்சுமியின் நம்பிக்கை! விக்ரமின் மறுபக்கம் - செல்லமே செல்லமே சீரியலில் உச்சகட்ட திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved