கதை பிடிக்கல... இவர் நடிச்சா யாரு பார்ப்பாங்கனு நினைச்சேன் - லெஜண்ட் சரவணன் குறித்து ஓப்பனாக பேசிய ஹாரிஸ்

Harris Jayaraj : லெஜண்ட் பட விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், முதலில் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் பண்ண மாட்டேன் என சொல்லினாராம்.

Music director Harris jayaraj speech in The Legend movie audio launch

தி லெஜண்ட் படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் சரவணன். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்தின் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக இந்தி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். மேலும் மயில்சாமி, பிரபு, விஜயகுமார், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் லெஜண்ட் சரவணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.

லெஜண்ட் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பூஜா ஹெக்டே, தமன்னா, ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவ்துலா, டிம்பிள் ஹயாத்தி என 10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் கலந்துகொண்டனர்.

Music director Harris jayaraj speech in The Legend movie audio launch

இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், முதலில் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் பண்ண மாட்டேன் என சொல்லினாராம். பின்னர் 6 மாதத்திற்கு பின்னர் இப்படத்தின் இயக்குனர்கள் கதையை மாற்றிவிட்டு வந்து சொன்னதும் ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளார். 

லெஜண்ட் சரவணன் தனது நண்பர் என்றும், அவருடன் 12 வருடம் பழக்கம் இருப்பதாக தெரிவித்த ஹாரிஸ், இப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் நடிச்சா யாரு பார்ப்பாங்கனு நினைச்சேன். படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படத்தின் மிகப்பெரிய பலமே படக்குழு தான்” என்றும் ஹாரிஸ் கூறினார்.

இதையும் படியுங்கள்... Edava Basheer : பிரபல பாடகர் மரணம்... மேடையில் பாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பரிதாபம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios